புளியங்குடியில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை விற்பனை செய்த 4 பேர் கைது

புளியங்குடியில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை  செய்த 4 பேர் கைது7, லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் – போலீசார் அதிரடி நடவடிக்கை

தென்காசி மாவட்டம்புளியங்குடி பகுதிகளில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த நான்கு நபர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 7 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்
புளியங்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை பொருள்கள் பள்ளி கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து SP. அசோக் குமார் உத்தரவின் பேரில் DSP மதன் அறிவுறுத்தலின் பேரில் இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர், தலைமையில் SI தீபன் குமார், கணேசன் ,மாரிதுரை, மணிகண்டன் ,துரைராஜ் பால்ராஜ், ஆகியோர் புளியங்குடி மேற்கு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

- Advertisement -

அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒரு தோப்பில் ஒளிந்து இருந்த நான்கு பேரை விசாரணை செய்ததில் அவர்கள் புளியங்குடி கெங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகேசன் மகன் வேலுதுரை [29], டிஎன் புதுக்குடி சிதம்பர விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் சந்துரு பிரசாத், [26],செக்கடி தெருவை சேர்ந்த ஜெயபால் மகன் சங்கர்கணேஷ் [26], மற்றும் வாசுதேவநல்லுர் வேலாண்டி கோவில் தெருவை சேர்ந்த முத்து பாண்டி மகன் மருது பாண்டி [26] என்பதும் இவர்கள் புளியங்குடி மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்களை குறிவைத்து பொட்டலங்களாக கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது இதனைத் தொடர்ந்து, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டஇவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் ₹7 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்செய்யப்பட்டது .

மேலும், இந்த கஞ்சா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, யாருக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது இதன் பின்னணி என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.பெரிய அளவில் புளியங்குடியில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் நேற்று காலை தென்காசி SP அசோக் குமார் புளியங்குடி காவல் நிலையத்தில் ஆய்வு செய்தார்
இளைஞர்கள் மற்றும் மாணவர்களை போதைப் பழக்கத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கில் புளியங்குடி போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சட்ட ஆலோசகர்.K.அருணாச்சலம்.

Leave A Reply

Your email address will not be published.