கொடைக்கானலில் போதை காளான் கஞ்சா ஆயில் விற்பனைக்கு வைத்திருந்த வெளி மாநில இளைஞர்கள் கைது காவல்துறையினர் அதிரடி

கொடைக்கானல் அண்ணா ராமசாமி நகர் பகுதியில் உள்ள காட்டேஜில் போதை காளான்,கஞ்சா ஆயில் விற்பனைக்கு வைத்திருந்த வெளிமாநில இளைஞர்கள் உள்ளிட்ட மூவர் கைது,போதை வஸ்த்துகள் பறிமுதல்…

- Advertisement -


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாக போதை வஸ்த்துகள் பயன்பாடு அதிகரித்த வண்ணமாக உள்ளது, காவல்துறையினர் கைது நடவடிக்கையில் ஈடுபட்டாலும் போதை வஸ்த்து விற்பனையானது அதிகரித்தே காணப்படுகிறது, குறிப்பாக கொடைக்கானல் நாயுடுபுரம் அருகே உள்ள தனியார் காட்டேஜ்களில் போதை வஸ்த்துகள் விற்பனை செய்ய வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில், காவல் துறையினர் நாயுடுபுரம் அருகே உள்ள அண்ணா ராமசாமி நகரில் உள்ள தனியார் காட்டேஜில் இருந்த இளைஞர்களை விசாரணை செய்யும் போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் திருவானந்தம் தலைமையில், உதவி காவல் ஆய்வாளர் சுரேஷ் பாபு உள்ளிட்ட காவலர்கள் சோதனை நடத்தி கைது செய்துள்ளனர். காவல் துறையினர் காட்டேஜை சோதனை செய்யும் போது போதை காளான்,கஞ்சா,கஞ்சா ஆயில் இருந்ததை தொடர்ந்து, காவல் துறையினர் காட்டேஜில் இருந்த மூவரை அழைத்து வந்து விசாரணை செய்யும் போது கொடைக்கானல் அண்ணா ராமசாமி நகரை சேர்ந்த நவீன் பிரகாஷ்(25), கேரளா மாநிலம் கோழிக்கோடை சேர்ந்த பிரேம்ஜித்(32), கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த அப்துல் வகாப்(35) என்பதும் தெரியவந்தது , குறிப்பாக காட்டேஜ்ஜிற்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு போதை வஸ்த்துகள் விற்பனை செய்வதை விசாரணையில் ஒப்பு கொண்டதை தொடர்ந்து இந்த மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், மேலும் அவர்களிடம் இருந்து கஞ்சா, காளான்,கஞ்சா ஆயில் உள்ளிட்டவைகளை பறமுதல் செய்து மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், மேலும் மலைப்பகுதியில் போதை வஸ்த்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது..

நிருபர்.R.குப்புசாமி

Leave A Reply

Your email address will not be published.