கொடைக்கானல் மன்னவனூர் மலைக்கிராமத்தில் போலீசார் நடத்திய சோதனையில் அதீத போதை தரும் போதை பொருள் மற்றும் அதிக விலை கொண்டு போதை வஸ்த்துகளை விற்பனைக்கு வைத்திருந்த வெளிமாநிலத்தை சேர்ந்த இருவர் கைது, போதை வஸ்த்துகள் பறிமுதல்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் கடந்த சில தினங்களாக போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து இருப்பதாக தொடர்ந்து புகார் எழுந்துள்ளது, இதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அறிவுறுத்தலின் படி காவல் சிறப்பு படையினர் இரவு தங்கும் விடுதிகளில் போதை பொருட்கள் விற்பனைக்கு சிலர் பதுங்கி இருப்பதாக எழுந்த தகவலின் அடிப்படையில்,3 ,DSPகள் தலைமையில் ,100 மேற்பட்ட காவலர்கள்7,குழுக்களாக மன்னவனூர், கிளாவரை, கூக்கால் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் உள்ள தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தினர்,

இதில் மன்னவனூர் மலைக்கிராமத்தில் உள்ள தனியார் விடுதியில் சோதனையில் ஈடுபடும் போது, ஒரு அறையில் இருந்த சுற்றுலாப்பயணிகள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததில்,அவர்களது அறைகளை சோதனை செய்யப்பட்டதில் ஹசீஸ் ரெசின், எல்.எஸ்.டி ஸ்டாம்புகள்,எம்.டி.எம்.ஏ,மெத்தபட்டமைன் உள்ளிட்ட அதீத போதை தரும் போதை மற்றும் அதிக விலை கொண்ட போதை வஸ்த்துகளை பறிமுதல் செய்து,விசாரணை மேற்கொண்டதில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நிப்புன் கச்வாகா(32), மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஆசிட் டமாங்(29), என்பதும், சுற்றுலாப்பயணிகளின் விற்பனைக்காக அறைகளில் பதுங்கி இருந்ததும் தெரியவந்தையடுத்து இருவரை கைது செய்து போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் இதுபோன்ற தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களைக் கடத்தினாலே அல்லது விற்பனை செய்தாலோ அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
நிருபர்.R.குப்புசாமி.

