தேனி மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ரோந்து பயன்பாட்டிற்க்கு SP.Dr.B.சினேஹாப்ரியா IPS அனுப்பி வைத்தார்.
தேனி மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ரோந்து பயன்பாட்டிற்க்கு SP.Dr.B.சினேஹாப்ரியா IPS அனுப்பி வைத்தார்.

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப்விஜய்., அவர்கள் 09.06.26 ம் தேதி தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் சிங்கப்பெண் இரு அணிகளாக பெண் சார்பு ஆய்வாளர் தலைமையில் , பெண் காவலர்கள் சுழற்சி முறையில் ரோந்து வாகனத்தை 10.06.26-ம் தேதி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.B.சினேஹாப்ரியா IPS அவர்கள் ரோந்து பயன்பாட்டிற்கு அனுப்பி வைத்தார்.
இதன் முக்கிய நோக்கம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்து, குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்து, பொது இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்குதல், பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ள இடம் இடங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகளவில் செல்லக்கூடிய மற்றும் நெருக்கடி மிகுந்த பகுதிகளில் காவல் துறையின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ரோந்தை உறுதிப்படுத்தி சட்ட விரோத செயல்களை தடுத்தல் போன்ற மேற்கொள்வார்கள்எனSP.Dr.B.சினேஹாப்ரியாIPS அவர்கள் தெரிவித்தார்.
நிருபர்.V.வேல்முருகன்.

