சாலையில்கிடந்த 5.64.லட்சம் பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த அட்டோ ஓட்டுனர் மதன் DC.தீபாசத்யன் IPS பாராட்டு.

சாலையில்கிடந்த 5.64.லட்சம் பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த அட்டோ ஓட்டுனர் மதன் DC.தீபாசத்யன் IPS பாராட்டு.

திருப்பூர் விஜயாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மதன். இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். 30.MAY. இன்று காலை தனது உறவினர் ஒருவரை அழைத்துக் கொண்டு ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போதும் வளம் பாலம் அருகே சாலையில் பிங்க் நிற பை ஒன்று இருப்பதை கண்டார். உடனடியாக ஆட்டோவை நிறுத்திய அவர், அந்த பையை திறந்து பார்த்துள்ளார். அந்த பை முழுவதும் கட்டுக்கட்டாக பணம் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து உடனடியாக திருப்பூர் தெற்கு காவல் நிலையம் சென்ற மதன் ஆய்வாளர் திரு.கணேஷ் குமாரிடம் அந்த பணப்பையை ஒப்படைத்தார். பையினை சோதனை செய்ததில் அதில் ரூ.5,64,000 பணம் இருந்தது தெரிய வந்தது.

- Advertisement -

இதனிடையே, ராஜஸ்தானை சேர்ந்த தானாராம் என்பவர்30.MAY. இன்று காலை தனது இரும்பு கடையில் இருந்து வங்கியில் செலுத்த எடுத்து சென்ற ரூ.5.64 லட்சம் பணம் சாலையில் செல்லும் போது கீழே விழுந்துவிட்டதாக திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து பையில் இருந்த அடையாளங்கள் மற்றும் பணம் உறுதி செய்யப்பட்ட பின்னர் தானாராமிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.

சாலையில் கிடந்த பணத்தை பத்திரமாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த மதனை நேரில் அழைத்து, காவல் துணை ஆணையர் தீபா சத்யன்IPS மற்றும் உதவி ஆணையர்திரு. ஜான் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் பாராட்டினர். மேலும் ஒவ்வொரு குடிமகனும் இதே போல பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் போலீசார் அறிவுறுத்தினர்.

தலைமைநிருபர்.A.மாரிராஜா

 

Leave A Reply

Your email address will not be published.