தமிழ்நாட்டு இளைஞர்களின் திறமைக்குரிய அங்கீகாரம் கடைக்கவேண்டும் விளையாட்டு துறைஅமைச்சர் ஆதவ்அர்ஜுனா

கல்லூரி காலத்தில் நேரு விளையாட்டு அரங்கில் உள்ள அரசு விடுதியில் தங்கி விளையாட்டுப் பயிற்சி மேற்கொண்ட நான், இன்று எனது வீடான அதே நேரு ஸ்டேடியத்தில் அமைச்சராக ஆய்வுப் பணியில் ஈடுபட்டேன்.
விளையாட்டு வீரர் – வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் ஆகியோர் தேவைகள் பற்றி அவர்களுடன் கலந்துரையாடினோம். கட்டுமானப் பணிகள், ஹாஸ்டல் உணவு மற்றும் பல்வேறு அடிப்படை விஷயங்கள் குறித்து கேட்டறிந்தோம். அரசு அலுவலர்களுடன் தேவையான திட்டங்கள் மற்றும் வருங்கால செயல்பாடுகள் குறித்து விவாதித்தோம்.

விளையாட்டில் இளைஞர்களின் பங்கேற்பை ஊக்கப்படுத்தும் விதமாகத் தேவைப்படும் அனைத்து வாய்ப்புகளையும், கட்டமைப்பு வசதிகளையும் நமது அரசு முதன்மை பணியாகச் செயல்படுத்தும்.

இளைஞர்கள் போதை கலாசாரத்திற்கு ஆளாவதைத் தடுக்க, விளையாட்டில் அவர்கள் ஆர்வத்தை மேம்படுத்துவது நமது அரசின் முக்கிய செயல்திட்டமாகும்.

நமது தமிழ்நாட்டு இளைஞர்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும்; விளையாட்டுத் துறையில் தமிழ்நாட்டு வீரர் – வீராங்கனைகள் உலகரங்கில் சாதனைப் படைக்க வேண்டும் என்பதே நமது அரசின் ஒரே நோக்கமாகும் என மாநில விளையாட்டுதுறை அமைச்சர் திரு.ஆதவ்அர்ஜுனா கூறினார்.
நிருபர்.AR.முருகேசன்

