புளியங்குடி பகுதியில் பள்ளி,கல்லூரி மாணவர்களை குறிவைத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபர் கைது

தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் பள்ளி கல்லூரி மாணவர்களை குறி வைத்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக புளியங்குடி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் புளியங்குடி SI.பவுல்ராஜ்,தலைமைகாவலர்.ராமசாமி,”ராஜா,ரமேஷ்,சரவணன் ஆகிய காவல்குழுவினர் புளியங்குடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை மடக்கிப்பிடித்து சோதனையிட்டனர். அப்போது அந்த இருசக்கர வாகனத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது புளியங்குடி பகுதியை சேர்ந்த சீதாராமன் மகன் முனியசாமி (29) என்பவரும் இவர் இதே பகுதியில் பெட்டி கடை நடத்தி வருவதும் தெரிய வந்தது.
இந்நிலையில் இவர் வடமாநிலத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து தமிழக அரசால் தடைசெய் புகையில் பொருட்களை வாங்கி பள்ளி, கல்லூரி மற்றும் வாகன ஓட்டுநர்கள் குறிவைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதனை அடுத்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சுமார் 17-கிலோ மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் 11,500 ரூபாய் பணம் புகையிலை விற்பனைக்காக பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
சட்ட ஆலோசகர்.K.அருணாச்சலம்

