திருச்சி தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற ஐந்து உணவு வணிகம் சீல் உணவு பாதுகாப்புதுறை அலுவலர் Dr.R.ரமேஷ்பாபு அதிரடி

.

 

24.05.2023 புதன்கிழமை திருச்சிராப்பள்ளி மாவட்டம் உறையூர் மற்றும் சாலை ரோடு பகுதியில் செயல்பட்டு வந்த ஐந்து உணவு வணிகம் தொடர்ந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பான்மசாலா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததால் உணவு பாதுக்காப்புத்துறை ஆணையர் உயர்திரு. R. லால்வேனா IAS அவர்களின் அவசர தடையானை உத்தரவு படி திருச்சிராப்பள்ளி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். R. ரமேஷ்பாபு அவர்கள் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவால் அந்த ஐந்து கடைகளும் சீல் செய்யப்பட்டது.

 

- Advertisement -

மேலும் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். R. ரமேஷ்பாபு அவர்கள் கூறுகையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இதுபோன்று புகையிலை பொருட்களை விற்பனை செய்து தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-இன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு கடை சீல் செய்யப்படும் என்று கூறினார். மேலும், பொதுமக்களும் இது போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் கீழே கண்ட எண்களுக்கு புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார்.
என்றும் அன்புடன்
டாக்டர் R .ரமேஷ் பாபு MBBS,
மாவட்ட நியமன அலுவலர்
உணவு பாதுகாப்பு துறை திருச்சிராப்பள்ளி மாவட்டம்.
தொலைபேசி எண்
99 44 95 95 95
95 85 95 95 95
மாநில புகார் எண்
94 44 04 23 22.

சிறப்புநிருபர்.மு.பாண்டியராஜன்.

Leave A Reply

Your email address will not be published.