கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் மருத்துவ பயனாளர்கள் நலச்சங்க கூட்டம்

கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் மருத்துவ பயனாளர்கள் நலச்சங்க கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஈரோடு காசநோய் மருத்துவ பணிகள் துணை இயக்குனர் டாக்டர். ராமச்சந்திரன் தலைமை தாங்கினார் மருத்துவமனை தலைமை டாக்டர். அசோக் முன்னிலை வகித்தார் சித்தா டாக்டர். வெங்கடாசலம் வரவேற்று பேசினார் கே.சி.கருப்பண்ணன் எம். எல். ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உள்நோயாளிகள் புற நோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்க படுகிறதா என கேட்டறிந்தார் தொடர்ந்து அவர் கூறும் போது தேவைப்படும் மருத்துவ உபகரணங்கள் தூய்மை பணியாளர்கள் டெக்னீசியன்களை நியமிக்க ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

- Advertisement -

மேலும் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு ரூபாய் 3, கோடியே 50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தையும் பார்வையிட்டார் தொடர்ந்து மருத்துவமனைக்கு ரூபாய் முப்பதாயிரம் மதிப்பில் புதிய போர்வெல் மோட்டார் நன்கொடையாக வழங்கிய குட்டிய பாளையம் பகுதியை சேர்ந்த மணி என்பவருக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் காது தொண்டை நிபுணர் டாக்டர்.சரவணகுமார் முன்னாள் ஊராட்சி தலைவர் பாவா தங்கமணி மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர்.மனோகரன் பொதுநல அமைப்பு நிர்வாகிகள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தலைமைநிருபர்.கவுந்திகண்ணன்

Leave A Reply

Your email address will not be published.