பயங்கரவாதத்தை எதிர்கொண்டழித்த வீரர் மீனாட்சிசுந்தரம் கீர்த்திசக்காரா விருது வழங்கிய குடியரசுதலைவர் திரௌபதிமுர்மு.

சமீபத்தில் காஷ்மீரில் நடைபெற்ற மிகவும் சிக்கலான ஒரு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது, தமிழகத்தை சேர்ந்த இந்திய இராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் அவர்கள் தனது முகத்திலும் மார்பிலும் எதிரிகளின் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில், உயிரைப் பொருட்படுத்தாமல் வீரத்துடன் போராடி, பயங்கரவாதியை நேருக்கு நேர் எதிர்கொண்டு சிதறடித்ததோடு தனது குழுவினரின் உயிரையும் போராடி காப்பாற்றினார்.
தேனி மாவட்டம் கே.கே.பட்டியைச் சேர்ந்த இந்திய இராணுவ வீரரான
(லான்ஸ் நாயக்) A. மீனாட்சி சுந்தரம் அவர்கள், நாட்டின் பெருமையை தமிழகத்தின் தேசப்பற்றை வீரத்தை உலகறியச் செய்துள்ளார்.

இவர் இந்திய இராணுவத்தின் Regiment of Artillery பிரிவில் பணியாற்றி, 34வது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் (34 Rashtriya Rifles) படையின் மூலம் காஷ்மீரில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.
அவரது அசாதாரண துணிச்சல், தன்னலமற்ற தியாக உணர்வு மற்றும் நாட்டுப்பற்றை பாராட்டி, இந்தியாவின் உயரிய அமைதிக்கால வீர விருதுகளில் ஒன்றான கீர்த்தி சக்கரா விருது மேதகு குடியரசுத் தலைவர் திரௌபதிமுர்மு அவர்களால் வழங்கப்பட்டது.
இது தேனி மாவட்டத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய தேசத்திற்கும் பெருமை சேர்க்கும் தருணமாகும். வீரத்தின் மறுபெயராக திகழும் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் அவர்களை போன்ற தேசபக்தர்களை மனமார்ந்து வீர வணக்கத்தை செலுத்தும் நேரத்தில் நம்முடைய தமிழக இளைஞர்கள் இவரை ரோல் மாடலாக முன்மாதிரியாக கொள்ள வேண்டும் .
தீயவர்களின் அச்சுறுத்தலுக்கு அஞ்சாத தேசபக்தி நேர்மையான வாழ்க்கை தூய்மையான இந்தியனாக ஒவ்வொரு தமிழக இளைஞரும் உருப்பெற வேண்டும்.
நமது இந்திய நாட்டிற்காக உயிரையும் துச்சமாக எண்ணி போராடும் மாவீரர்கள் தான் நம் தேசத்தின் உண்மையான நாயகர்கள் உண்மையான தலைவர்கள்.
நிருபர்.V.வேல்முருகன்.

