கொடைக்கானல் துணைநடிகை தந்தை கொலை வழக்கில் 10 பேர் கைது.

கொடைக்கானலில் மாயாவி திரைப்பட துணை நடிகை தந்தை கொடுரமான கொலை செய்யப்பட்ட வழக்கில்,பெண் உட்பட 10 நபர்கள் கைது,ஒருவர் தப்பியோட்டம்,
சென்னை விருகம்பாக்கம் அமைந்துள்ள சுமார் மூன்றரை கோடி மதிப்பில் ஆன அபார்ட்மெண்ட் வீட்டிற்காக இந்த கொலை நடைபெற திட்டம் அரங்கேறி இருப்பதாக காவல் துறை சார்பில் திடுக்கிடும் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பு.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் முக்கிய குடியிருப்பு பகுதிகளில் ஒன்றாக உள்ள குறிஞ்சி ஆண்டவர் முருகன் கோவில் உள்ளது,இந்த கோவில் அருகே்மாயாவி திரைப்பட துணை நடிகை விஷ்ணு பிரியாவின் தந்தை சூரிய நாராயணனுக்கு (73) சொந்த பங்களா உள்ளது, இந்த பங்களாவில் அனுமதி இல்லாமல் தனியார் தங்கும் அறைகள் சுற்றுலாப்பயணிகளுக்கு வாடகைக்கு விடப்படுவதாக சொல்லப்படுகிறது,
இந்நிலையில் இந்த பங்களாவில் நான்கு நாட்களுக்கு முன்பு சுற்றுலாப்பயணிகள் போல் ஐந்து இளைஞர்களை வருகை புரிந்து தங்கியுள்ளனர்,இதனையடுத்து கடந்த சனிக்கிழமை நள்ளிரவு சுமார் 1:30 மணிக்கு, இந்த பங்களாவின் பணியாளர் ஆறுமுகம் வெளியே வந்து சப்தமிட்டு ,அருகே உள்ள குடிருப்பு பகுதி வாசி செல்போன் எண்ணில் இருந்து மாவட்ட காவல் காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து,இந்த பங்களாவில் கொலை நடந்து இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்,
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர்,பங்களாவின் கேட்டில் போடப்பட்டிருந்த பூட்டை உடைத்து கொண்டு உள்ளே சென்றனர், அங்கு முதல் அறையில் முரளி(பணியாளர்) கை,கால்களை டேப் மூலம் கட்டி போட்ட நிலையில் இருந்தவரை மீட்டனர்,அடுத்த அறைக்கு செல்லும் போது துணை நடிகையின் தந்தையை சேரில் அமரவைத்து வாய்,மூக்கு,தலை என உடல் முழுவதும் டேப் போட்டு சுற்றி, உடலில் ரத்த காயங்கள் ஏற்படாமல் கொடுரமாக கொலை செய்து இருந்தது தெரியவந்ததை தொடர்ந்து, அவரது சடலத்தை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு உடற் கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர்,
மேலும் பணியாளர் ஆறுமுகத்தை துணியால் கை,கால் கட்டப்பட்டு இருந்ததால் அவரே துணியை கழற்றி வெளியே வந்ததும் தெரிய வந்துள்ளது,மேலும் பங்களாவில் தங்கியிருந்த 5 இளைஞர்கள் தங்களை கட்டி போட்டதுடன்,சூரிய நாரயணனை டேப்பால் சுற்றி கொலை செய்ததாக தகவல் தெரிவித்துள்ளனர், இதனையடுத்து சம்பவ இடமான பங்களாவிற்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேக பிரியா,திண்டுக்கல் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்,கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டும்,மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரித்து வந்தனர், இதனையடுத்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரதீப் IPS அவர்கள் அறிவுறுத்தலின் படி 3 தனிப்படைகள் அமைத்து கொடைக்கானல் காவல் ஆய்வாளர் வசந்தகுமார் தலைமையில்,100 க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, வேளாங்கண்ணி, சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து தனிப்படை தீவிர விசாரணை நடத்தினர்,இதில் சோழிங்கர் பகுதியை சேர்ந்த
சியாம்(31) தலைமையில், அவரது நண்பர்களான மகேந்திரன்,அரக்கோணத்தை சேர்ந்த கோகுல்நாத்(26) மற்றும் ரஞ்சித்(32),திருவள்ளூவரை சேர்ந்த கிஷோர் என்ற கிருஷ்ண பிரசாத்(25),அட்சய நடராஜ்(26),கார்த்தி(26) உள்ளிட்ட 7 இளைஞர்கள் நண்பர்களாக உள்ளனர், மேலும் இவர்கள் சுய தொழில்,கட்ட பஞ்சாயத்து மற்றும் பணத்தை இரட்டிப்பாக பெற்று தருவது உள்ளிட்ட பணிகளை செய்து வந்துள்ளனர்,
இந்நிலையில் சியாம் அவரது நண்பரான சென்னையை சேர்ந்த கிரணுக்கும்( 36-மருத்துவர்),அவரது தாயாரான கிரிஜா(53) விற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது, குறிப்பாக கிரிஜா பணத்தை இரட்டிப்பாக மாற்றி தருவேன் என மோசடி தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார், இந்நிலையில் சியாமிற்கு கிரிஜாவுடன் பழக்கம் அதிகரிக்கவே பணத்தை இரட்டிப்பு மோசடி தொழிலுக்கு 5 லட்சம் பணத்தை கிரிஜாவிடம் சியாம் பெற்றுள்ளார், அப்போது பணம் கிரிஜாவுக்கு திரும்ப தர வில்லை என கூறி பணம் தருவதற்கு பல நெருக்கடி கிரண் கொடுத்துள்ளார், மேலும் சியாமிடம் கிரிஜா எனது அப்பா சூரிய நாரயணன் கொடைக்கானலில் உள்ளார், அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு விருகபாக்கத்தில் உள்ள சுமார் மூன்றரை கோடி மதிப்புள்ள அப்பார்ட்மென்ட் வீடு வழக்கில் அவருக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது, அந்த பட்டாவை அவரது வீட்டில் சென்று அவரை கட்டி போட்டு விட்டு எடுத்து வருமாறு கடந்த 3 மாதங்களுக்கு முன்பே திட்டம் தீட்டியுள்ளனர்,
மேலும் இதை நீ செய்து முடித்தால் நான் அதிகமாக உனக்கு பணம் தருகிறேன் என சியாமிற்கு ஆசை வார்த்தைகள் கிரிஜாவும், அவரது மகன் கிரணும் கூறியுள்ளார், இதனையடுத்து இந்த 7 பேர் கொண்ட கும்பல் இரண்டு முறை கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில் அருகே வருகை புரிந்து சூரிய நாரயணன் பங்களாவிலும்,இதன் அருகே உள்ள பங்களாவிலும் தங்கியுள்ளனர்,மேலும் பங்களாவில் உள்ள சூழல்கள், நிலவரங்கள்,பட்டாக்கள் எங்கு உள்ளது என கிரிஜாவிடம் கேட்டறிந்து தொடர்ந்து பங்களாவை நோட்டமிட்டுள்ளனர், இதனையடுத்து 3 வது முறையாக சியாம், மகேந்திரன்,கோகுல்நாத், ரஞ்சித்,கிஷோர் உள்ளிட்ட ஐவர் குழுவினர் ஸ்விப்ட் காரில் இந்த பங்களாவுக்கு கடந்த 19ஆம் தேதி வருகை புரிந்து பலமுறை தங்கி இருப்பதாக பணியாளர்களிடம் லாவகமாக பேசி ரொம்ப நாட்கள் பழகி இருப்பதாக காட்டி,வரும் போதே பங்களா பணியாளர் ஆறுமுகத்திற்கு மது பாட்டில்கள் அதிகமாக வாங்கி வந்துள்ளனர், பங்களாவிற்கு வந்த உடனே ஆறுமுகம் உள்ளிட்ட ஐவரும் இணைந்து மது அருந்தியுள்ளனர்,20ஆம் தேதி முழுவதும் பங்களாவிலேயே இருந்துள்ளனர், 21ஆம் தேதி அன்று மாலை ஆறுமுகம் வெளியே மது பாட்டில் வாங்க சென்றுள்ளார், அதே போல அங்குள்ள பெண் பணியாளர் அவரது வீட்டிற்கு பணி முடிந்து சென்றுள்ளார்,
இது தான் தருணம் என நினைத்த ஐவர் குழுவினர் ஒரு அறையில் பங்களா பணியாளர் முரளியை கட்டி போட்டுள்ளனர்,அடுத்த அறையில் சூரிய நாரயணனை சேரில் அமர வைத்து டேப் மூலம் வாய்,மூக்கு,தலை உள்ளிட்ட உடல் முழுவதும் கட்டி போட்டு வைத்துள்ளனர், மது வாங்கி வந்த ஆறுமுகத்தை டேப் தீர்ந்ததால் துணி மூலம் கை கால்களை கட்டி போட்டதாகவும்,பங்களாவில் உள்ள ஹார்ட் டிஸ்க், மற்றும் மூன்றரை கோடி மதிப்புள்ள அப்பார்ட்மென்ட் பட்டா உள்ளிட்டவற்றை கைப்பற்றி பங்களாவின் வெளிபுறத்தில் பூட்டு போட்டு விட்டு தப்பி ஓடி சென்றதாக,கொலை செய்தவர்கள் தெரிவித்துள்ளனர்,
மேலும் அரக்கோணத்தில் ஸ்டூடியோ வைத்துள்ள விக்னேஷ்(28) கடையில் இந்த ஹார்ட் டிஸ்க்,பட்டா மற்றும் செல்போனை வைத்துவிட்டு சென்றதாக கொலையாளிகள் ஒப்பு கொண்டுள்ளனர், இதன் அடிப்படையில் சியாம்,ரஞ்சித்,கோகுல்நாத்,கிஷோர்,மகேந்திரன்,அட்சயநடராஜன்,கார்த்தி,விக்னேஷ் மற்றும் கொலைக்கு மூலக்காரணமான கிரிஜா மற்றும் அவரது மகன் கிரண்,மற்றும் இந்த பங்களாவில் பணியாற்றிய ஆறுமுகத்திற்கும் கிரிஜாவிற்கும் சூரிய நாரயணன் மூலம் பழக்கம் ஏற்பட்டு பணம் இரட்டிப்பு உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபட்டதுடன்,இந்த கொலைக்கு உறுதுணையாக இருந்ததும்,தன்னை தாக்கியது போல்,கைகளை கட்டியதும் தெரியவந்ததை அடுத்து ஆறுமுகம் உள்ளிட்ட 10 நபர்களை கைது செய்துள்ளனர்,மேலும் மகேந்திரன் தப்பியோடியுள்ளார்,இவர்களிடம் இருந்து தங்க மோதிரம்,செயின்,மூன்றரை கோடி மதிப்புள்ள பட்டா,2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் சூரிய நாரயணனுக்கு,கிரிஜாவின் கணவரும் நணபர்களாகி உள்ளனர்,மேலும் சூரிய நாரயணன் கொலை வழக்கில் கிரிஜா ஜாமின் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து உள்ளார், மேலும் 3 மாதங்களாக சூரிய நாரயணன் சென்னையில் வசிக்கும் கிரிஜா வீட்டில் தங்கி இருந்து மருத்துவமனைக்கும் சென்று வந்தததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நிருபர்.R.குப்புசாமி.

