திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் N.மணிவண்ணன் IPS மேற்பார்வையில் சீருடைபணியாளர்கள் தகுதிதேர்வு
Uniformed personnel qualification examination under the supervision of Tirunelveli City Police Commissioner N. Manivannan IPS
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் N.மணிவண்ணன் IPS மேற்பார்வையில் சீருடைபணியாளர்கள் தகுதிதேர்வு.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) நடத்தும், 2025-ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர்கள் / சிறை காவலர்கள் பதவிகளுக்கான உடல் தகுதி தேர்வு மற்றும் உடல் திறனாய்வு தேர்வு,

திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் திருநெல்வேலி மாவட்ட தேர்வு மையத்திற்காக சிறப்பு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள மாநகர காவல் ஆணையர் முனைவர்.N.மணிவண்ணன், IPS. அவர்கள் மேற்பார்வையில், மாநகர காவல் துணை ஆணையர் திரு.S.விஜயகுமார் (தலைமையிடம்) அவர்கள் தலைமையில் 27.01.2026 முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் 29.01.2026 ம் தேதி அன்று சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதி தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற 590 விண்ணப்பதாரர்களில் 587 விண்ணப்பதாரர்கள் உடல் திறனாய்வு தேர்வில் (100 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் மற்றும் பந்து எறிதல்) கலந்து கொண்டனர்.
நிருபர்.R.ஜோதிபாசு.

