திருநெல்வேலி சரகத்தில் உள்ள காவல் மாவட்டங்களின் ஆய்வுக் கூட்டம் IG. திரு.விஜயேந்திர பிதாரி IPS தலைமை

திருநெல்வேலி சரகத்தில் உள்ள காவல் மாவட்டங்களின் ஆய்வுக் கூட்டம் – தென்மண்டல காவல்துறை தலைவர்IG. திரு.விஜயேந்திர பிதாரி IPS தலைமையில் நடைபெற்றது*

திருநெல்வேலி சரகத்தில் இன்று நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்க திருநெல்வேலிக்கு வருகை தந்த தென்மண்டல காவல்துறை தலைவர் IG. திரு.விஜயேந்திர பிதாரி, IPS, அவர்கள், இன்று 20.01.2026 காலை திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அங்கு பணியாற்றும் காவல் அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கி, அவர்களிடமிருந்து குறை நிவாரண மனுக்களையும் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்ட ஊர்க்காவல் படையைச் சேர்ந்த காவலர்களை முதல் முறையாக போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் காவல் பணிக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்து, அவர்களுக்கு தேவையான போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் உபகரணங்களையும் வழங்கினார்.

பின்னர், ஆயுதப்படை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வழக்கு சான்று வைப்பகமான (Malkhana) புதிய கட்டிடத்தை திறந்து வைத்து, அப்பகுதியில் மரக்கன்று ஒன்றையும் நட்டு வைத்தார்.

- Advertisement -

தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில், திருநெல்வேலி சரகத்திற்கு உட்பட்ட காவல் மாவட்டங்களின் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர்DIG. திரு.P. சரவணன், IPS., திருநெல்வேலி,
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் முனைவர். N.மணிவண்ணன், IPS
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் V. பிரசண்ண குமார், IPS., கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் R.ஸ்டாலின், IPS, மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N. சிலம்பரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், சரகத்தில் உள்ள காவல் மாவட்டங்களில் சட்ட ஒழுங்கு பராமரிப்பு, குற்ற வழக்குகளில் புலன் விசாரணைகளை துரிதமாக முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்வது, நிலுவையில் உள்ள பிடிவாரண்டுகளின் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கியஅம்சங்கள்குறித்துவிவாதிக்கப்பட்டு,தேவையானஅறிவுரைகள்வழங்கப்பட்டது.

மேலும், திருநெல்வேலி மாவட்டத்தில் குற்ற வழக்குகளில்புகார்அளித்தநபர்களின்புகாரின்பேரில் வழக்குகள் பதிவு செய்து, புலன் விசாரணை முடித்து இறுதி அறிக்கை தயாரித்தது தொடர்பான ஏற்பளிப்பு படிவங்களை,தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் மனுதாரர்களுக்கு

நேரடியாகமாவட்டகாவல்அலுவலகத்தில்வைத்துவழங்கினார். மேலும்குற்றவழக்குகளில் புகார்அளித்தவர்தாங்கள்அளித்தபுகாரின்அடிப்படையில்காவல்துறையினர்புலன் விசாரணை முடித்து நீதிமன்றத்தில்இறுதிஅறிக்கைதாக்கல்செய்தவிவரங்களைஅறிந்து கொள்ளும் உரிமைகுறித்தும் அவர்களுக்குவிளக்கினார்.

இதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு காவல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய மூன்று காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 11 காவல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி, பாராட்டு தெரிவித்தார்.

நிருபர்.R.ஜோதிபாசு.

Leave A Reply

Your email address will not be published.