திருவண்ணாமலை மாவட்டத்தில் மாணவிகள் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க SP. K.கார்த்திகேயன் IPS.நடவடிக்கை
திருவண்ணாமலை மாவட்டத்தில்மாணவிகள் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரானகுற்றங்களை தடுக்க SP.K.கார்த்திகேயன் IPS.

நடவடிக்கை. திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பில் மாவட்டம் முழுவதும் மாணவிகள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .K.கார்த்திகேயன், IPS, அவர்கள் உத்தரவின்படி,
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கராத்தே மற்றும் சிலம்பம் போன்ற தற்காப்புகலை பயிற்சி மாவட்ட காவல் துறையின் சார்பில் வழங்கப்படுகிறது.
(04.09.2023) தண்டராம்பட்டு வட்ட காவல் ஆய்வாளர் தலைமையில் தண்டராம்பட்டு அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள பெண் குழந்தைகளுக்கு கராத்தே மற்றும் சிலம்பம் போன்ற தற்காப்பு கலை பயிற்சிகள் துவங்கப்பட்டுள்ளன.
சிறப்புநிருபர்.R.மணிமாறன்.

