கோவை மாவட்டம் பணத்துடன் பைக் திருடிய திருடர்கள் கைது காவல் துறையினர் அதிரடி.

கோவை மாவட்டம் பணத்துடன் பைக் திருடிய திருடர்கள் கைது காவல்துறையினர்அதிரடி.

கோவைமாவட்டத்தில் தொடர்திருட்டு வழக்கில் ஈடுபட்ட 3, நபர்களை கைது செய்த கோவை மாவட்ட காவல்துறையினர்.கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலைய பகுதியில் ரவிக்குமார் (59) என்பவர் வசித்து வருகிறார்.

இவர் 10.08.2023 அன்று இருசக்கர வாகனத்தில் சென்று அவரது வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 2,29,000/- பணத்தை எடுத்துக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தின் சீட்டுக்கு அடியில் உள்ள பாக்சில் வைத்துவிட்டு வாகனத்தை எடுத்துக்கொண்டு கருமத்தம்பட்டி to அன்னூர் ரோட்டில் உள்ள தனியார் கடையின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்குச் சென்றவர் திரும்பி வந்து பார்த்தபோது அவரது இரு சக்கர வாகனம் மற்றும் அதற்குள் வைத்திருந்த ரூபாய் 2,90,000/-பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

- Advertisement -

இது சம்மந்தமாக பாதிக்கப்பட்ட நபர் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்           திரு. பத்ரிநாராயணன், IPS அவர்கள் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மே‌ற்கொ‌ண்ட நிலையில், கருமத்தம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அவர்கள் சோமனூர் அருகே வாகன சோதனை மேற்கொண்ட போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சின்னச்சாமி மகன் முருகேசன் (46), நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் மகன் ஐயப்பன் (38) மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பழனிசாமி மகன் சரவணகுமார் (30) ஆகியோரை விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

இந்நிலையில் மேற்படி நபர்களை காவல் நிலையம் அழைத்து விசாரித்த போது மேற்படி திருட்டு வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்தது. மேலும் மேற்படி நபர்கள் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது எனவே மேற்படி நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து திருடப்பட்ட பொருட்கள் மற்றும் திருட்டு குற்றத்தில் பயன்படுத்திய இருசக்கர வாகனம்-2 மற்றும் ரூபாய் 1,68,000/- பணத்தை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை திருட்டு வழக்கை பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்சப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.என்று கோவைமாவட்டகாவல்துறை அறிவித்துள்ளது.

நிருபர்.P.நடராஜ்.

Leave A Reply

Your email address will not be published.