ஆவடியில் காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக மருத்துவ முகாம் மற்றும் மழலையர் காப்பகம் திறப்பு விழா

ஆவடியில் காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக மருத்துவ முகாம் மற்றும் மழலையர் காப்பகம் திறப்பு விழா

 

ஆவடி, அக்டோபர் 17:தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரியும் காவல் துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் டாக்டர் மகேஷ் குமார் அகர்வால்IPS ஆலோசனையின் பேரில் தமிழ்நாடு காவல் துறையில் “காவல் குடும்பம்” திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் ஆவடி காவல் ஆணையரகத்தில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனை மேம்படுத்தும் நோக்கில் மருத்துவ முகாம் மற்றும் மழலையர் காப்பகம் திறப்பு விழா நடைபெற்றது.

“காவல் குடும்பம்” திட்டத்தின் தலைவர் டாக்டர். வனிதா அகர்வால், ஆவடி எஸ்.எம். நகர் காவலர் குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள மழலையர் காப்பகத்தைத் திறந்து வைத்தார்.

- Advertisement -

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத்தலைவர்DGP . டாக்டர் மகேஷ் குமார் அகர்வால் IPS அவர்கள் கலந்து கொண்டு காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், ஆவடி காவல் ஆணையர் செந்தில்குமார்,IPS காவல் ஆணையரின் துணைவியார் டாக்டர் அருள் ஜோதி, காவல் இணை ஆணையர், துணை ஆணையர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

ஆவடி காவல் ஆணையரகத்தில் பணிபுரியும் காவல்துறையினர் தங்களது பணிநேரத்தில் குழந்தைகளைப் பாதுகாப்பாகப் பராமரிக்கவும் தங்களது பணிகளை எவ்வித மனக்கவலையுமின்றி மேற்கொள்ளவும், அவர்களது குழந்தைகளுக்குப் பாதுகாப்பான பராமரிப்பை வழங்கவும் அம்மழலையர் காப்பகம் உதவும்.

மேலும், காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் உடல்நலத்தைப் பேணிப் பாதுகாக்கும் நோக்கில்,,ஆவடி எஸ்.எம். நகர் போலீஸ் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில், அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவக் குழுவினரால் பொது மருத்துவப் பரிசோதனை, இதய நலப் பரிசோதனை, நுரையீரல் பரிசோதனை, இரத்த நாளங்கள் தொடர்பான பரிசோதனை மற்றும் கண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இம்முகாமில் சுமார் 500 காவல் துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Dr. S. முருகானந்தம் (எ )நந்தா
முதன்மை ஆசிரியர்

Leave A Reply

Your email address will not be published.