தென்னிந்திய ரோல்பால் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ , மாணவிகளுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு

தென்னிந்திய ரோல்பால் போட்டியில் வெற்றி பெற்ற
மாணவ , மாணவிகளுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு

தென்னிந்திய அளவில் நடைபெற்ற ரோல் பால் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவ மாணவியர் கலந்து கொண்டு தேசிய அளவில் வெற்றி பெற்றுள்ளனர்.
கடந்த ஜூலை 29, 30 ஆம் தேதியில் நடைபெற்ற போட்டியில்
ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு ரோல் பால் சங்கத்தின் சார்பில் கலந்து கொண்டு, தென்னிந்திய ரோல்பால் போட்டிக்கு தேர்வாகினர், தேர்வாகிய மாணவ, மாணவிகளுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட சாய் ஜி ரோல்பால் சங்கத்தின் செயலாளர் மது நிதா, சாய் ஜி பயிற்சியாளர் காயத்ரி ஆகியோர் 26 to 31 வரையிலான தேதியில் சிறப்பு பயிற்சி முகாம் கேகே நகர் சாய் ஜி ரோல்பால் மைதானத்தில் ஏற்பாடு செய்து உடற்பயிற்சி மற்றும் விளையாட்டின் நுணுக்கங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.

- Advertisement -

பின்பு தமிழ்நாடு ரோல் பால் ஆடவர் அணி, பெண்கள் அணி என இரண்டு அணியும் தென்னிந்திய ரோல் பால் செயலாளர் சுப்ரமணியம் மற்றும் தமிழ்நாடு ரோல் பால் செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் கர்நாடகா மாநிலம் பெல்காமில் செப்டம்பர் மாதம் 2,3 தேதியில் நடைபெற்ற நான்காவது தென்னிந்திய ரோல்பால் போட்டியில் பங்கு பெற்று முறையாக ஆந்திரா,கர்நாடகா,பாண்டிச்சேரி, தெலுங்கானா மாநிலத்துடன் தமிழ்நாடு அணி விளையாடி வெற்றி பெற்றனர், இறுதி போட்டி கேரளாவுடன் விளையாடின, இதில் கேரளா முதலாம் இடமும், தமிழ்நாடு ஆண்கள், பெண்கள் அணி இரண்டாம் இடம் பெற்றன.

இவர்களுடன் ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு ரோல் பால் சங்கத்தின் பயிற்சியாளர் ராஜசேகர் மற்றும் மேலாளர் பிரேம் நாத் வழிகாட்டுதலின்படி வெற்றி பெற்று திரும்பினர் . வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு திருச்சி கண்டோன்மென்ட் காவல் ஆய்வாளர் சிவக்குமார் அவர்கள், மாநில ரோல்பால் சங்கத்தின் துணைத் தலைவர் சரவணன், புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ஜெயக்குமார், செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகடாமியின் தலைவர் ராகேஷ் சுப்ரமணியன், செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் செயலாளர் பிரவீன் ஜான்சன் மற்றும் பெற்றோர்கள், பயிற்சியாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வாழ்த்தினார்கள்.

தலைமை நிருபர் .S .வேல்முருகன்

Leave A Reply

Your email address will not be published.