அரியலூர்மாவட்ட காவல்துறைசார்பாக பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு.விழிப்புணர்வு ஆலோசனைகூட்டம் SP.ச.செல்வராஜ் தலைமை.
அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.செல்வராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
திரு.ஆர்.விஜயராகவன் மதுவிலக்கு அமலாக்க பிரிவு அவர்கள் முன்னிலை வகித்தார்.அரியலூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் திரு. தர்மசீலன் மற்றும் அரியலூர் குழந்தை நல குழு தலைவர் திரு.செந்தில்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், குழந்தை திருமணங்கள், குடும்ப வன்முறைகள் மற்றும் பிற குற்றங்கள் முதலியவற்றிலிருந்து பாதுகாத்து அவர்களுக்கு பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கிடும் நோக்கிலும்,மேலும் குற்றங்கள் நடைபெறாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தருதல் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.
குற்றம் நிகழ்ந்ததாக 181(women help desk)என்ற பெண்கள் சிறப்பு உதவி எண்-க்கு தகவல் கிடைத்தால்,உடனடியாக சம்பவ இடத்திற்கு பெண் காவல் ஆளிநர்கள் விரைந்து சென்று துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.செல்வராஜ் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் நபர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார்கள்.
கூட்டத்தில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.அஜீம்
,மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.வேலம்மாள், Child Helpline 1098 அலுவலர் திரு.வீரபாண்டியன் , காவல்துறை அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
சிறப்புநிருபர்.மகாதேவன்.
.