கோயம்புத்தூர் சரக DIGயாக பணியாற்றி வந்தவர் விஜயகுமார்IPS இவர் இன்று காலை 6:45 மணி அளவில் தன் வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கோயம்புத்தூர் சரக DIGயாக பணியாற்றி வந்தவர் விஜயகுமார்IPS இவர் இன்று காலை 6:45 மணி அளவில் தன் வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

எளிய பின்னணியைச் சேர்ந்த விஜயகுமார் தேனி மாவட்டத்தில் உள்ள அரண்மனை புதூர் கிராமத்தில் இருந்து வந்தவர். விஜயகுமாரின் தந்தை விஏஓவாக பணியாற்றியவர். இந்நிநிலையில் குரூப் 1 தேர்வு எழுதி 2003-ம் ஆண்டு டி.எஸ்.பியாக பணியில் சேர்ந்தார். ஆனாலும் தொடர்ந்து படிப்பில் ஆர்வம் செலுத்திய விஜயகுமார் கடந்த 2009-ம் ஆண்டு யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்று ஐ.பி.எஸ்ஸாக தேர்வானார்.

முன்னதாக காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார் விஜயகுமார். பின் சிபிசிஐடி எஸ்பியாக தனது பணியை தொடர்ந்தார். சிபிசிஐடியாக எஸ்.பியாக பணியாற்றிய போது டி.என்.பி.எஸ்சி குரூப் 1, குரூப் 2, குரூப் 4 மோசடிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு உடனடியாக குற்றவாளிகளை கைது செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து சென்னை அண்ணா நகர் துணை ஆணையராக பணிபுரிந்துள்ளார். இவர் அண்ணாநகர் துணை ஆணையராக இருந்த போது அரும்பாக்கத்தில் நடந்த வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை 40 மணி நேரத்திற்குள் கைது செய்தார். இது காவல் துறை வட்டாரத்தில் மிக முக்கியமாக பார்க்கப்பட்டது. இந்த ஆண்டு2023 ஜனவரி மாதம் டி.ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்று கோவை சரக டி.ஐ.ஜியாக பணியாற்றி வந்தார்.

- Advertisement -

விஜயகுமார் ஆன்மீகத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். இவர்7.7.23 இன்று காலை அவரது இல்லத்தில் துப்பக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுமுறைப்படி அனைத்தும் முடிந்தவுடன்டிஜிபி உள்பட காவல் அதிகாரிகள் அமைச்சர்கள் அனைவரும் அஞ்சலிசெலுத்திவருகின்றனர்.

இன்று காலை வழக்கம் போல் நடை பயிற்சிக்கு சென்று திரும்பிய விஜயகுமார் ஐபிஎஸ் தனது உதவியாளரின் கை துப்பாக்கியை வாங்கி தன்னை தானே சுட்டு கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் பிரேதத்தை கைப்பற்றிய காவல்துறையினர் பணிச்சூழல் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தனிப்பட்ட காரணங்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.

பணிக்காலத்தில் நற்பெயரைப் பெற்றிருந்த டிஐஜி விஜயகுமாரின் மரணம் கோவை காவல்துறை வட்டாரத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் மனதை திடபடுத்திக்கொண்டு தமது மன அழுத்த பிரச்சைனைக்கான காரணத்தை கண்டறிய வேண்டும் இதிலிருந்து முழுமையாக வெளிவர நாம்என்ன செய்ய வேண்டும் என்று தொலைநோக்கு பார்வையோடு மனத்தெளிவுடன் சிந்தித்து செயல்ப்படுவதே நமக்கு நலமான வளமான வாழ்வை தரவல்லது தீர்வுகாணமுடியாத எந்தபிரச்சனையும் மனிதவாழ்வில் இல்லை மனம்உடைந்து தற்க்கொலை செய்து நமதுநல்வாழ்வை நாமேஅழித்துக் கொள்வதுடன் நம்மை சார்ந்தவர்களின் வாழ்வும் கேள்வி குறியாகிவிடும் என்பதை நாம் சிந்தித்து செயலாற்றவேண்டும் அதுவேசாலசிறந்ததாகும்.

மேலும் மக்கள் காவல் பணியாற்றக்கூடிய காவல்துறையினர் மன உளைச்சலால் தற்க்கொலை செய்துக் கொள்ளும் அளவிற்க்கு செல்வதை தடுக்க அரசும் துறைரீதியாக மேல் அதிகாரிகளும் காவல்துறையினர் எந்தவித தலையீடுகளும் நெருக்கடிகளும் இல்லாமல் மன உளைச்சலின்றி சுதந்திரமாக மக்கள்காவல் பணியாற்ற துறைரீதியாக முழுகவனம் செலுத்தவேண்டும் இல்லையென்றால் காவல்துறையினர் வாழ்க்கை பாழாவதுடன் மக்கள்பாதுகாப்பும் கேள்வி குறியாகிவிடும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.