மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல் தட்டச்சு நிறுவன உரிமையாளர் போக்ஸோ வழக்கில் கைது.

திருச்சி திருவெறும்பூர் அருகில் உள்ள பகுதியில் தட்டச்சு நிறுவனம் நடத்தி வரும் 68 வயதுமிக்க முதியவர் தொடர்ந்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் போக்ஸோ வழக்கில் திருவெறும்பூர் மகளிர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவெறும்பூர் பகுதியில் உள்ள நவல்பட்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி வயது 68, இவர் அதே பகுதியில் சொந்தமாக தட்டச்சு நிறுவனம் நடத்தி வருகிறார் இந்நிலையில் அவர் தட்டச்சு நிறுவனத்தில் தட்டச்சு பயலே வரும் பள்ளி மாணவிகள் மற்றும் திருமணமான பெண்களிடம் தட்டச்சு சொல்லிக் கொடுப்பது போல் சத்தியமூர்த்தி அவர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார் மேலும் மாணவிகளின் அங்கங்களை அவர்களுக்கு தெரியாமல் புகைப்படம் எடுத்து வைத்து ரசித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் திருவெறும்பூர் காவல் சரக காவல் துணை கண்காணிப்பாளர் DSP. திரு. அறிவழகன் அவர்கள் உத்தரவின் பேரில் திருவெறும்பூர் மகளிர் காவல் ஆய்வாளர் திருமதி. மங்கையர்க்கரசி அவர்கள் சத்தியமூர்த்தி தட்டச்சு நிறுவனத்தில் தீவிர விசாரணை செய்து சத்தியமூர்த்தியை கைது செய்து அவர் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி சிறையில் அடைத்தார் பாலியல் தொல்லையில் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகாரின் பேரில் தீவிர நடவடிக்கை மேற்க்கொண்டு சத்தியமூர்த்தியை போக்ஸோ வழக்கில் கைது செய்தமைக்கு காவல் ஆய்வாளர் திருமதி.மங்கையர்க்கரசி அவர்களை திருவரம்பூர் சரக DSP. திரு. அறிவழகன் அவர்கள் பாராட்டினார்கள் தலைமை நிருபர் N. ராகேஷ் சுப்பிரமணி


