கொடைக்கானலில் போதை காளான் விற்பனையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் கைதுகாவல்ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான காவல்குழுவினர்அதிரடி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து போதைக்காளான் விற்கப்படுவதாக கொடைக்கானல் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் கொடைக்கானல் காவல்ஆய்வாளர்.திரு.பாஸ்கரன் தலைமையிலான காவல்குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொடைக்கானல் அண்ணா சாலை பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த இரண்டு இளைஞர்களை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா மற்றும் போதை காளான் விற்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களை விசாரித்ததில் கொடைக்கானல் காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் வசந்தகுமார் 21, அன்னை தெரசா நகர் பகுதியைச் சேர்ந்த சேவியர் மகன் சிவகுருநாதன் 19, என்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த போதைக்காளான் கைப்பற்றப்பட்டது. இது பற்றி கொடைக்கானல் காவல்ஆய்வாளர் திரு.பாஸ்கரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சுற்றுலா பயணிகளுக்கு போதை காளான் விற்ற இரண்டு இளைஞர்களையும் கைது செய்தனர்.
கொடைக்கானலில் சமீப காலமாக போதை காளான் விற்பனை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. சிறப்பு தனி படை அமைத்து போதை காளான் விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிருபர்.R.குப்புசாமி.


