டாஸ்மாக்கில் மது அருந்திய இருவர் உயிரிழப்பு; திருச்சி லால்குடியில் பரபரப்பு காவல்துறையினர் தீவிர விசாரணை
டாஸ்மாக்கில் மது அருந்திய இருவர் உயிரிழப்பு; திருச்சி லால்குடியில் பரபரப்பு காவல்துறையினர் தீவிர விசாரணை
திருச்சி மாவட்டம் தச்சங்குறிச்சியைச் சேர்ந்த சிவகுமார் மற்றும் முனியாண்டி ஆகிய இருவர் வெள்ளிக்கிழமை மதியம் தச்சங்குறிச்சியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் வீடு திரும்பிய இருவருக்கும் கடும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இருவரும் தச்சங்குறிச்சி அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காததால், இருவரையும் லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு முனியாண்டிக்கு இரவு முழுவதும் குளுகோஸ் ஏற்றப்பட்டுள்ளது.
சிவகுமார் சிகிச்சை பெற்றதும் வீட்டிற்குச் சென்ற நிலையில்,
இன்று காலை உயிரிழந்ததாக தகவல் வெளியானது. மறுபுறம் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட முனியாண்டியும் உயிரிழந்தார். இது குறித்து முனியாண்டியின் மகன் மணிராஜ் என்பவர் போலீசில் புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி மாவட்ட .SP. சுஜித்குமார், ADSP. குத்தாலிங்கம், லால்குடி DSP. அஜய்தங்கம், உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இருவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறப்புநிருபர்.மு.பாண்டியராஜன்