திருச்சி குழுமணி நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் கேமரா வசதியுடன் சோதனைச் சாவடி SP.டாக்டர்.V.வருண்குமார் IPS துவக்கிவைத்தார்

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே குழுமணி நான்கு சாலை சந்திக்கும் இடத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் SP.டாக்டர்.V.வருண்குமார் IPSஅவர்கள் தலைமையில்,
ஜீயபுரம் உட்கோட்டம்
காவல்துறை துணை கண்காணிப்பாளர் DSP.ம.பாரதிதாசன்
அவர்கள் முன்னிலையில் புதியதோர் உதயமாய் மக்கள் பயன்பாட்டிற்காகவும், எளிதாக புகார்களை காவல்துறையிடம் கொண்டு வந்து சேர்ப்பதற்காகவும், குற்றங்கள் களைவதற்காகவும், எளிதாக குற்றவாளிகளை அடையாளம் காணவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுப்பதற்காகவும், குழுமணியில் நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் சோதனைச் சாவடி, சுற்றிலும் நான்கு கேமராக்கள் வசதியுடன் திறந்து வைக்கப்பட்டது.
இதில் ஜீயபுரம் காவல் ஆய்வாளர் சிவசுப்பிரமணியம், சோமரசம்பேட்டை
காவல் ஆய்வாளர் ஜாபர், ஜீயபுரம் காவல் உதவி ஆய்வாளர் நாகராஜ்
மற்றும் ஜீயபுரம் சக காவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தலைமைநிருபர்.S. வேல்முருகன்


