திருச்சி 56 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் உணவுபாதுகாப்பு துறை அலுவலர். Dr.ரமேஷ்பாபு நடவடிக்கை.
31.05.2023 புதன்கிழமை பொதுமக்களிடம் இருந்து வந்த தகவலை அடுத்து திருச்சிராப்பள்ளி பெரிய கடை வீதி ராணி தெருவில் உள்ள சீனிவாசன் த/பெ. கண்ணன் அவர்கள் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பான்மசாலா போன்ற புகையிலை பொருட்களை மொத்த விற்பனை செய்து வந்ததாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்
உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். ஆர். ரமேஷ்பாபு அவர்கள் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவால் அவரது வீட்டில் ஆய்வு செய்தபோது சுமார் 56 கிலோ புகையிலை பொருட்களும் 9 கைபேசியும், ரூபாய் 6,57,320/- ரொக்கம் மற்றும் கடைக்கு அன்பளிப்பு கொடுப்பதற்காக 227 கிராம் வெள்ளி நாணயங்களும் பறிமுதல் செய்யப்பட்டு மேல்நடவடிக்கைக்காக ஸ்ரீரங்கம் சரககாவல் உதவி ஆணையர் . நிவேதாலட்சுமி மற்றும் கோட்டை ஆய்வாளர் திரு. தயாளன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களில் வழக்கு போடுவதற்காக 6 சட்டபூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுபாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். R. ரமேஷ்பாபு அவர்கள் கூறுகையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இதுபோன்று புகையிலை பொருட்களை விற்பனை செய்வதோ பதுக்கி வைப்பதோ போன்ற தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-இன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு கடை சீல் செய்யப்பட்டு காவல் துறையிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று கூறினார். மேலும், பொதுமக்களும் இது போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் கீழே கண்ட எண்களுக்கு புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார்.
என்றும் அன்புடன்
டாக்டர் R ரமேஷ் பாபு MBBS,
மாவட்ட நியமன அலுவலர்
உணவு பாதுகாப்பு துறை திருச்சிராப்பள்ளி மாவட்டம்.
தொலைபேசி எண்
99 44 95 95 95
95 85 95 95 95
மாநில புகார் எண்
94 44 04 23 22.
சிறப்புநிருபர்.மு.பாண்டியராஜன்.