தஞ்சை கோழி கழிவுகளில் கிடந்த முதியவரை மீட்ட காவலர்களுக்கு குவிந்து வரும்பாராட்டு.

தஞ்சை கோழிகழிவுகளில் கிடந்தமுதியவரை மீட்டகாவலர்களுக்கு குவிந்துவரும்பாராட்டு.

கல்லுக்குள் ஈரம் உண்டு, மனித நேயம் மரணிக்கவில்லை என்பதற்கு சான்றாக தஞ்சையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த காவலர்கள் கோழி கழிவு குப்பையில் குப்பையோடு குப்பையாக கிடந்த முதியவரை மீட்டு முதலுதவி செய்த காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

செங்கிப்பட்டி பாலத்தின் அடியில் 70, வயது முதியவர் கோழி கழிவுகள் கொட்டப்பட்ட குப்பையில் குப்பையோடு குப்பையாக உடல் மெலிந்து சோர்வுடன் முனகியவாறு இருந்தார்.

இதனை ரோந்து பணியில் இருந்த காவலர்கள் திரு.ராஜகோபால், திரு.சிவலிங்கம், திரு.மோகன்ராஜ் ஆகியோர் முதியவரை மீட்டு முதலுதவி செய்தனர்.

- Advertisement -

பின்னர் முதியவரை குளிப்பாட்டி, ஆடைகள் அணிவித்து, உணவு வழங்கினார்கள்

பின்னர் 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் கொடுத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினர் என்றால் அச்சம் கலந்த பார்வை இருக்கும் நிலையில் அவர்களுக்குள்ளும் மனித நேயமும் உண்டு என்பதற்கு சான்றாக அமைந்துள்ள இந்த வீடியோ பதிவை பார்த்து அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

நிருபர்.சக்திவேல்.

Leave A Reply

Your email address will not be published.