தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் DIG .P.மூர்த்திIPS தலைமையில் டிஜிட்டல் ஆதாரம் சேகரிப்பு தொடர்பாக பயிற்சி முகாம்.

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் DIG .P.மூர்த்திIPS தலைமையில் டிஜிட்டல் ஆதாரம் சேகரிப்பு தொடர்பாக பயிற்சி முகாம்.

திருநெல்வேலி சரகமான தென்காசி திருநெல்வேலி தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பணி புரியும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முதல் சார்பு ஆய்வாளர் வரை மொத்தம் 60 நபர்களுக்கு 15.03.2025 தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர்DIG. முனைவர் பா.மூர்த்தி IPS அவர்கள் உத்தரவின் பேரில், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் SP. S. அரவிந்த் அவர்களின் தலைமையில், தென்காசி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (Cyber Crime) திரு. ஜூலியஸ் சீசர் அவர்களது மேற்பார்வையில் டிஜிட்டல் ஆதாரம் சேகரிப்பு தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டது.

- Advertisement -

பயிற்சியில் டிஜிட்டல் அல்லது மின்னணு சான்றுகள் என்பது ஓர் வழக்கில் நீதிமன்றத்திற்கு வழங்கப்படும் பல்வேறு சாட்சிகளில் ஒன்றாகவும். இவை விசாரணைக்காக பயன்படுத்தக்கூடிய டிஜிட்டல் வடிவத்தில் சேமிக்கப்படும் ஆதரங்களின் ஒன்றாகும் இவை வீடியோ, ஆடியோ, இணையவழி மற்றும் தரவு பரிமாற்றம் போன்ற அனைத்தையும் சேகரிப்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் இத்தகைய டிஜிட்டல் ஆதாரத்தை பயன்படுத்தி குற்றவாளிகளை கண்டறிவது குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டது.

பயிற்சியின் முடிவில் பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் காவல்துறை துணை தலைவர் அவர்களால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

நிருபர்.P.அண்ணாமலை.

Leave A Reply

Your email address will not be published.