விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பாக போக்குவரத்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பாக போக்குவரத்து சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

விழுப்புரமாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில்

விழுப்புரமாவட்டம்கோட்டகுப்பம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோட்டகுப்பம் நகராட்சி மற்றும் கிராம ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊராட்சி தலைவர்கள் வார்டு கவுன்சிலர்கள் அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களை அழைத்து கோட்டகுப்பம் மனோன்மணியம் திருமண மண்டபத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

- Advertisement -

இதில் கோட்டகுப்பம் ஆய்வாளர் திரு. ராபின்சன் அவர்களின் தலைமையில்
வாகன விபத்து நடைபெறாமல் இருக்க தலைக்கவசம் அணிய வேண்டும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது மற்றும் போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதன் மூலம் உயிரிழப்பை தவிர்க்கலாம் என்றும்.

முக்கிய சந்திப்புகளில் பேனர் வைப்பது பற்றி இதனால் ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் பிரச்சினைகளை எடுத்து விளக்கி கூறினார்.

இதில் கோட்டக்குப்பம் உதவி ஆய்வாளர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.

நிருபர்.ராமநாதன்.

Leave A Reply

Your email address will not be published.