திருச்சி முத்தூட் பைனான்ஸில் நகை அடகுவைத்து பாதிக்கப்பட்ட சக்கரவர்த்திக்கு ரூ.1,லட்சம் நஷ்ட ஈடு பெற்றுதந்த திருவெறும்பூர் காவல்துறை
. ‘ ஆய்வாளர் திரு. சந்திரமோகன்’
தான் திருச்சி திருவரம்பூர் பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி தனக்கு சொந்தமான புஷ்பராக கல் பதித்த தங்க டாலரை கடந்த ஆண்டு 2022,april,முத்துட் பைனான்ஸ் இல் ரூபாய் 30 ஆயிரத்து 400 க்கு அடமானம் வைத்துள்ளார்.
உதவிஆய்வாளர் திரு.ராஜீவுகாந்தி
இந்நிலையில் கடந்த ஆண்டு 2022, ஆகஸ்ட் மாதம் முத்தூட் பைனான்ஸ் இல் இருந்து வந்த கடிதத்தில் சக்கரவர்த்தி அடமானம் வைத்துள்ள தங்கம் தரம் குறைவாக இருப்பதாகவும் ஆகையால் உடனே மேலும் ரூபாய் 11,020 தொகையை செலுத்த வேண்டும் என்றும் இல்லையெனில் உங்கள் தங்கநகை ஏலம் விடப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தது இதனை அறிந்து ஓரிரு நாட்களில் பணத்தை ஏற்பாடு செய்து முத்தூட் பைனான்ஸில் தொகையை செலுத்த சென்ற சக்கரவர்த்தியிடம் உங்கள் நகை ஏலம் விடப்பட்டது என்றும் கூறி ஏலம் போன நகையால் பெறப்பட்ட தொகையில் மீதம் ரூபாய் 7000 இருப்பதாகவும் இதனைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றும் முத்தூட் பைனான்ஸ் மேலாளர் கூறியுள்ளார்.
தனக்கு அநீதி இழைக்கப்பட்டது உணர்ந்த சக்கரவர்த்தி உடனடியாக போலீஸ் பார்வை பத்திரிக்கை துணையுடன் திருச்சி திருவரம்பூர் காவல் நிலையத்தில் அதிகமதிப்புள்ள எனது நகையை வெறும் 37000 ரூபாய் தான் பொறுஎன்று என்னை ஏமாற்றுகிறார்கள் முத்தூட் பைனாஸ் மீது தக்கநடவடிக்கை எடுக்கவேண்டுமாய்.april,2023, சக்கரவர்த்தி புகார் அளித்தார்.
திரு. சக்கரவர்த்தி
திருவரம்பூர் காவல் ஆய்வாளர் திரு. சந்திரமோகன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு.ராஜீவ் காந்தி அவர்களும் முத்தூட் கிளை நிர்வாகிகளை அழைத்து முறைய கவிசாரணை மேற்க்கொண்டு சமுதாய சேவை பதிவேடு செய்துள்ளனர்.இதன் வாயிலாக இந்திய ரிசர்வ் வங்கி இந்தியப் பிரதமர் தமிழ்நாட்டின் முதல்வர் அனைவருக்கும் புகார் அளிக்கப்பட்டது நேர்கொண்ட பார்வையுடன் இவ்வழக்கில் விசாரணை மேற்க்கொண்டு இந்திய ரிசர்வ் வங்கி முத்தூட் பைனான்ஸ்நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட சக்கரவர்த்திக்கு இழப்பீடாக ரூபாய் ஒரு லட்சம் வழங்குமாறு உத்தரவிட்டது இதனைஏற்று முத்தூட் பைனான்ஸ் நிர்வாகம் பாதிக்கப்பட்டவருக்கு முறையே ஒரு லட்சரூபாய்க்கான DD.காசோலையை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட நபரின் குரல் :
சக்கரவர்த்தி ஆகிய நான் எனக்கு ஏற்பட்ட அநீதி வேறு சாமானிய மனிதனுக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்னும் பொருட்டு நடுநிலை வகிக்கும் போலீஸ் பார்வை பத்திரிக்கை நண்பர்களின் துணையுடன் முறையானகாவல்துறை உதவியோடு நாட்டின் பிரதமர் தமிழ்நாட்டின் முதல்வர் இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் காவல் நிலையம் என இவ்விடங்களில் நியாயம் கேட்டு நான் அளித்த புகாரினை நன் நெறியுடன் விசாரித்து எனக்கு நீதி கிடைக்கப் பெறச் செய்த அனைவருக்கும் நன்றி கூறி மகிழ்கிறேன் .
தலைமை நிருபர்.
ராகேஷ் சுப்பிரமணியன்.