திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு பேரணி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர். முருகேசன் துவக்கி வைத்தார்
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு பேரணி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர். முருகேசன் துவக்கி வைத்தார்

திருப்பூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சார்பாக மார்பக புற்றுநோய் பற்றிய பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையேவிழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் மருத்துவ மாணவர்கள் சங்கம் சார்பாக பேரணி நடைபெற்றது பேரணியை அரசு மருத்துவகல்லூரி முதல்வர் டாக்டர். முருகேசன் அவர்கள் துவக்கி வைத்தார்.

மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் டாக்டர்.அமுதா மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர். ஜெயசங்கர் நாராயணன் நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர். கோபாலகிருஷ்ணன், மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் இணை மற்றும் உதவி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் மார்பக புற்றுநோயின் காரணிகள் சுய பரிசோதனை கண்டறியும் வழிகள் மற்றும் அதன் சிகிச்சை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது அதில் 21 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களும் சுய மார்பக பரிசோதனையின் அவசியம் மற்றும் அதன் முறைகள் பற்றியும் விரிவாக விளக்கப்பட்டது .

அதன் வழிமுறைகள் பின்வருமாறு கண்ணாடி முன் நின்று மார்பகங்களின் மாற்றங்களை பார்க்கவும் கைகளை இடுப்பில் அழுத்தி மேலே உயர்த்தியவாறு மார்பகங்களை பரிசோதிக்கவும் தட்டையான மேல்பரப்பில் படுத்து கைகள் கொண்டு ஏதேனும் கட்டியை உணர முடியுமா என்று சோதிக்கவும் இதுபோன்ற சோதனைகளில் ஏதேனும் கட்டியை உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும் என்றுதெரிவித்தனர் விழாவின் தொடர்ச்சியாக மருத்துவ மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன போட்டிகளில் வெற்றி பெற்ற மருத்துவ கல்லூரி மாணவ மாணவியருக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் .முருகேசன் அவர்கள் பரிசுகளை வழங்கினார் பேரணி மற்றும் விழாவினை நோய் தடுப்புத் துறையை சேர்ந்த மருத்துவர்கள் டாக்டர். சிவா, டாக்டர் E. கௌசிக் டாக்டர் ஸ்ரீ கௌதம்,டாக்டர். பாக்கியலட்சுமி ஆகியோர் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
நிருபர். R. பழனிச்சாமி


