திருப்பூர் அரசுமருத்துவகல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் மகத்தான சாதனை.

திருப்பூஅரசுமருத்துவகல்லூரி மருத்துவமனையில் குறை பிரசவத்தில் எடை குறைவாக பிறந்த இரட்டை குழந்தைகளை காப்பாற்றி சாதனைபடைத்துள்ளனர்.கடந்த ஏப்ரல் மாதம் 20,ம்தேதி திருப்பூர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் இரட்டை குழந்தைகள் பிறந்தன… இக்குழந்தைகள் ஆண் 900,கிராமும், பெண் 700,கிராமும், இருந்ததால் குழந்தைகள் உயிர்ப்பிழைக்காது என எண்ணி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்திடமே ஒப்படைத்து சென்று விட்டனர்.
இதனை அறிந்த மருத்துவக் கல்லூரி டீன் திரு.Dr.முருகேசன் அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில்,இருப்பிட மருத்துவர் திரு.கோபாலகிருஷ்ணன், குழந்தைகள் நல பிரிவு தலைமை டாக்டர் செந்தில் குமார், மற்றும் டாக்டர்கள் ராஜகோபால், தனசேகரன், ப்ரியா விஸ்வாஷம், குழந்தைகள் பிரிவு செவிலியர்கள், அனைவரும் கடந்த 130 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து குழந்தைகளை கவனித்து வந்ததன் காரணமாக தற்போது ஆண் குழந்தை 2.300கிராமும், பெண் குழந்தை 1.830கிராமும் எடை அதிகரித்து இயல்பு நிலைக்கு வந்தனர்.குழந்தைகளுக்கு தாய்ப்பால் வங்கி மூலமாக பால் ஊட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது… குழந்தைகளின் எதிர்காலம் கருதி பெற்றோரை குழந்தைகள் நல குழு முன்பு ஆஜர்படுத்தி பின்னர் குழந்தைகள் நலபாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைத்தனர்.. விரைவில் குழந்தைகள் முறையாக தத்து கொடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.இதே சிகிச்சையினை தனியார் மருத்துவமனையில் பார்த்திருந்தால் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ 40 ஆயிரம் முதல்ரூ 50 ஆயிரம் வரை செலவாகும்… டாக்டர்களின் இத்தகைய பங்களிப்பு திருப்பூர் மற்றும் தமிழ்நாட்டு தாய்மார்களிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
நிருபர் R . பழனிசாமி


