திருப்பூர் பி. என். ரோடு. சாலையில் கவிழ்ந்த அரசு பேருந்து அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்கள் உயிர் ஊசல்.

திருப்பூர் பி. என். ரோடு. சாலையில் கவிழ்ந்த அரசு பேருந்துஅதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்கள் உயிர் ஊசல்.

திருப்பூரில் நான்காவது குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட பி என் ரோடு சாலையால் பொதுமக்கள் அவதி ப ,என். ரோடு. சாலையில் ஏற்பட்ட 2 அடி பள்ளத்தால் அரசு பேருந்து நிலை தடுமாறி பள்ளத்தில் சாய்ந்தது.

திருப்பூர் மாவட்டம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
பி .என். ரோடு. சாலையில் கடந்த சில மாதங்களாக நான்காவது குடிநீர் திட்டத்திற்காக குழாய் பதிக்கும் பணி நடைபெற்று பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன

- Advertisement -

இந்த பி. என். ரோடு. சாலை கணக்கம்பாளையம் பிரிவு முதல் புதிய பேருந்து நிலையம் வரை 50, அடி 60, அடி உள்ள சாலை சுமார்
20, அடி சாலை மட்டும் தான் உபயோகிக்க முடியும் மிச்சம் 30, அடி சாலை குழாய் பதிப்பு பணிக்காக தோண்டப்பட்டு அப்படியே பல மாதங்களாக கிடப்பில் கிடைக்கிறது.

கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பிச்சம்பாளையம் நால்ரோடு சந்திப்பு அருகே திடீர் பள்ளம் புதிய பேருந்து நிலையம் முன்பும் திடீர் 2 அடி பள்ளம் உள்ள குழியை மூட வேண்டும் என்று பொதுமக்கள் பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தும் செவி சாய்க்காத அதிகாரிகள் மெத்தனபோக்கில் செயல்பட்டதால் 30,கு மேற்பட்ட பயணிகளுடன் திருப்பூர் கணக்கம்பாளையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் சென்ற அரசு பேருந்து நிலை தடுமாறி தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படாத காரணத்தினால் பேருந்து அந்த பள்ளத்தில் சாய்ந்தது இதில் பயணித்த பொதுமக்கள் சிலர் காயமின்றி உயிர் தப்பினர்.

மக்களின் சாலை போக்குவரத்து பாதுகாப்பிற்க்கா மாவட்டநிர்வாகம்கிடப்பில் கிடக்கும் பணியை உடனடியா முடித்து மக்களின் உயிர்பாதுகாப்பிற்க்கு நடவடிக்கை மேற்க்கொள்ளவேண்டுமாய் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைமைநிருபர்.A.மாரிராஜா.

Leave A Reply

Your email address will not be published.