மக்கள் பாதுகாப்பு காவல்பணியே மகத்தானது திருக்கோவிலூர் DSP.பார்த்திபன்.

மக்களின் புகார் மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்படும்.மக்கள் அச்சமின்றி பாதுகாப்புடன் இருக்க தக்கநடவடிக்கை மேற்க்கொள்ளபடும் திருக்கோவிலூர் உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற திரு.பார்த்திபன் அவர்கள் அறிவிப்பு.

- Advertisement -

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளராக,ஆக.30-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னா் காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.பார்த்திபன் கூறியதாவது:

மக்களின் புகாா் மனுக்கள் மீது உடனடித் தீா்வு காணப்படும். அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்கவும், சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், வாகன தணிக்கையை ஒழுங்குபடுத்தி, திறமையாக செயல்படுத்தி, குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கப்படும்.
திருக்கோவிலூர் உள்கோட்ட பகுதிகளில் குற்றங்களை தடுத்து சட்டம் – ஒழுங்கை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்
பொதுமக்கள் தங்களுக்கான பிரச்சினைகள் குறித்து 24 மணி நேரமும் என்னை எப்போது வேண்டுமானலும் சந்தித்து, குறைகளை தெரிவிக்கலாம். மக்களின் குறைகள் உடனடியாக தீர்க்கப்படும்.
குழந்தைத் திருமணங்கள் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சிறார் குற்றங்கள், போதைப்பொருள் விற்பனை போன்றவற்றில் ஈடுபடும் நபர்கள் மீது, பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று DSP.பார்த்திபன் அவர்கள்கூறினார்.

நிருபர்.R.ராமநாதன்.

Leave A Reply

Your email address will not be published.