திருச்சிமாவட்ட ம் கல்லக்குடி தொடர்நகை திருடர்கள் கைது லால்குடிசரக காவல் குழுவினர் அதிரடி

திருச்சிமாவட்ட ம் கல்லக்குடி தொடர் நகை திருடர்கள் கைது லால்குடிகாவல் சரக காவல் குழுவினர் அதிரடி.

 

திருச்சி மாவட்ட கல்லக்குடி ராஜா தியேட்டர் பஸ் நிலையம் சர்வீஸ் ரோடு பகுதியில் கல்லக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் போலீசார் வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக பதிவு எண் இல்லாத வாகனத்தில் வந்த 2 பேர் போலீசாரை கண்டவுடன் அதிவேகமாக குறுக்கு வழியில் சென்றனர். போலீசார் தடுத்தும் அவர்கள் நிற்காத நிலையில், அந்த வாகனத்தை போலீசார் துரத்திச்சென்று மடக்கிப் பிடித்தனர்.

- Advertisement -

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தை சேர்ந்த செல்வராஜ்(வயது 28) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் கல்லக்குடி காவல்நிலைய சரகத்தை சேர்ந்த மேலரசூர், கீழரசூர், கல்லகம், புள்ளம்பாடி பகுதியிலும், சிறுகனூர் காவலநிலைய சரக பகுதியிலும் கடந்த 2 மாதமாக வீடுகளில் நகைகளை திருடி வந்ததும் தெரியவந்தது.

நகைகள் மீட்பு

இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து அந்தந்த காவல் நிலையங்களில் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின்பேரில் லால்குடி DSP. திரு.அஜய்தங்கம், இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதும் போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து பிடிபட்ட 2 பேரிடம் இருந்தும், கல்லகம் கிராமத்தில் 2 பவுன், மேலரசூர் கிராமத்தில் 3, பவுன், புள்ளம்பாடி கிராமத்தில் 12¼, பவுன், கீழரசூர் கிராமத்தில் 7, பவுன் என அவர்கள் திருடிய மொத்தம் ரூ.12 லட்சம் மதிப்பிலான 24¼. பவுன் நகைகள் கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். இதில் செல்வராஜை லால்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி லால்குடி கிளை சிறையில் அடைத்தனர். சிறுவனை திருச்சி கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.கைப்பற்றப்பட்ட நகைகள் முறைப்ப்டிஅந்தந்த பகுதி புகாரின் அடிப்படை சரிபார்த்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

சிறப்பு நிருபர்.முபாண்டியராஜன்.

Leave A Reply

Your email address will not be published.