திருவண்ணாமலை அரசால்தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர்கள் கைது காவல் துறையினர் அதிரடி
திருவண்ணாமலை அரசால்தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர்கள் கைது காவல்துறையினர் அதிரடி.
(17.08.2024) திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்SP. முனைவர். K.பிரபாகர் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி திருவண்ணாமலை நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்DSP. திரு.R.ரவிச்சந்திரன் அவர்களின் மேற்பார்வையில் திருவண்ணாமலை நகர காவல் நிலைய ஆய்வாளர் திரு.V.ராஜா அவர்கள் தலைமையிலான தனிப்படையினர் திருவண்ணாமலை நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திருவண்ணாமலை நகரம், சிவன்படத் தெருவை சேர்ந்த பரஸ்ராம் வ/38 த/பெ சுன்னாஜி அவரது மகன் 2.நர்பத் வ/21 த/பெ பரஸ்ராம் ஆகியோர் அவர்களுக்கு சொந்தமான மளிகை கடையிலும், 3.திருவண்ணாமலை நகரம், அய்யங்குளத்து தெருவை சேர்ந்த நாதூராம் வ/63 த/பெ மாங்கிலால் மற்றும் அவரது மகன் 4.சதிஷ்குமார் வ/34 த/பெ நாதூராம் ஆகியோர் அவர்களுக்கு சொந்தமான மளிகை கடையிலும், 5.திருவண்ணாமலை மாவட்டம், பே கோபுரம் தெருவை சேர்ந்த துரைசாமி வ/39 த/பெ சின்னதம்பி என்பவர் அவருக்கு சொந்தமான மளிகை கடையிலும் குட்கா போன்ற போதைப்பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு
மேற்கண்ட5, நபர்களையும் காவல் ஆய்வாளர் கைது செய்து திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளபட்டது.மேலும் இவர்களிடம் இருந்து 65,000/-மதிப்புகொண்ட சுமார் 57கிலோ கிராமம் எடையுள்ள குட்கா போன்ற போதைபொருட்கள் கைபற்றப்பட்டது.
சிறப்பு நிருபர். இரா .சக்திவேல்.