புகையிலை மற்றும் போதைபொருள் விற்பனையை தடுக்கதென்காசி காவல்துறை தொடர் வேட்டை

புகையிலை மற்றும் போதைபொருள் விற்பனையைதடுக்க தென்காசி மாவட்டகாவல்துறைதொடர் வேட்டை.

- Advertisement -

தென்காசி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.அரவிந்த் அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட முழுவதும் தொடர் வாகன சோதனை செய்யப்படும், கடைகளில் விற்பனை செய்தால் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மூலம் கடைக்கு சீல் வைக்கப்பட்டும் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டையூர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல்உதவிஆய்வாளர் திரு. பட்டு ராஜா அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் சட்ட விரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த கோட்டையூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்த ராமையா என்பவரின் மகன் மகேஷ் 45 என்பவரை கைது செய்து நீதிமன்ற காவல் புற்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 5 கிலோ எடை கொண்ட ரூபாய் 3,000 மதிப்புக்கான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

நிருபர்.ஆறுமுகச்சாமி.

Leave A Reply

Your email address will not be published.