கொள்ளையடிக்கப் பட்ட சுமார் 4 கிலோ 800 கிராம் (600 பவுன்) மற்றும் 60 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் குற்றவாளிகள் கைது தனிப்படை காவல் குழுவினர் அதிரடி
கொள்ளையடிக்கப் பட்ட சுமார் 4 கிலோ 800 கிராம் (600 பவுன்) மற்றும் 60 லட்சம் ரூபாய் பணம்பறிமுதல் குற்றவாளிகள்கைது தனிப்படை காவல்குழுவினர் அதிரடி.
கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரசன்னா (40), என்பவர் தீக்க்ஷா என்ற நகைக்கடையை நடத்தி வருகிறார். கடந்த மாதம் மேலாளர் விஜயகுமார் மற்றும் கடை ஊழியரை தனது காரில் அனுப்பி பெங்களூர் அவென்யூ சாலையில் உள்ள தர்ஷன் நகைக்கடையில் இருந்து தனது நகைக்கடைக்கு சுமார் 5, கிலோ 950, கிராம் (743 பவுன்) தங்கத்தை வாங்கி வர அனுப்பியுள்ளார். நகைகளை வாங்கிக்கொண்டு சேலம் நோக்கி செல்லும் போது காரிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான பெரியாம்பட்டி பூலாம்பட்டி ஆற்றின் மேம்பாலம் முடியும் இடத்தில் 2 கார்களில் வந்த 4 நபர்கள் காரை வழிமறித்து கொள்ளையடித்துச் சென்றனர்.
இதைத்தொடர்ந்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மேற்கு மண்டல காவல்துறை தலைவர்.IG.K.புவனீஷ்வரி.IPS அவர்கள் மற்றும் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் DIG.S.ராஜேஸ்வரி.IPS.,அவர்களின் உத்தரவின் பேரிலும் காவல் கண்காணிப்பாளர் N.ஸ்டீபன் ஜேசுதாஸ் அவர்களின் மேற்பார்வையிலும் 01).அரூர் காவல் துணை கண்காணிப்பாளர் DSP.திரு.புகழேந்தி கணேஷ், 02).பாலக்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் DSP .செல்வி.சிந்து மற்றும் 03).சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் DSP.திரு.இளமுருகன் ஆகியோர் தலைமையில் 5 காவல் ஆய்வாளர்கள், 22 உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களை உள்ளடக்கிய 10 தனி படைகள் அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையானது சோதனை சாவடி விவரங்கள், சுங்கச்சாவடிகளை கடக்க பயன்படுத்திய fastag விவரங்கள், அப்பகுதியில் பதிவான செல்போன் CDR பதிவுகள் ஆராய்ந்து, பழைய குற்றவாளிகளை பற்றிய விவரங்கள் என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு. 29.09.2023 அன்று நகைக்கடை ஊழியர்கள் பயன்படுத்திய கார் கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் எல்லைக்குட்பட்ட பகுதியான கொல்லாபுரியம்மன் கோவில் அருகே உள்ள வெட்காளியம்மன் கோவில் அருகே நிறுத்தப்பட்டு இருந்தது தெரியவந்து கைப்பற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து சிசிடிவி கேமரா, செல்போன் பதிவுகள், வாகன பயன்பாடுகளை ஆராய்ந்ததில் அனைவரும் கேரளாவை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது சம்பவத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டிருந்ததால் கூட்டுக் கொள்ளையாக வழக்கு பதிவு செய்யப்பட்டு. 01).சுஜித்(29), 02).சரத்(36), 03).பிரவீன் தாஸ்(33) ஆகியோரை 16.10.2023 அன்று காலை 9.00 மணிக்கு கோயம்புத்தூரில் வைத்து கைது செய்யப்பட்டது.
இவர்களிடம் 2 கார்கள் 3 செல்போன்கள் மற்றும் 33 கிராம் தங்க சங்கிலி கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 04).கே.ஏ.சிகாபுதீன் (எ) சிபு(36), 05).எம்.எஸ்.சைனு(30), 06).அகில் (எ) ஆம்புலன்ஸ் (30), 07).ஏ.எஸ்.சஜித் (எ) குட்டன்(35) ஆகியோரை கைது செய்து 1 கார், 1 செல்போன் 3,லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. மேலும் முக்கிய குற்றவாளிகளான அந்தோணி மற்றும் சிரில் ஆகியோரை சென்னையில் கைது செய்து அவர்களிடம் 5, கிலோ 950,கிராம் எடையுள்ள தங்க நகைகள் மற்றும் 16, லட்சத்து 50, ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. மேலும் தொடர் புலன் விசாரணை நடைபெற்று வருகிறது.
தலைமைநிருபர்.P.ஜெகதீஷ்.