தென்மண்டல காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா காவல் துறைஅதிகாரிகள் முன்னிலையி ல் தீயிட்டு அழித்தனர்.
தென்மண்டல காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா காவல் துறைஅதிகாரிகள் முன்னிலையி ல் தீயிட்டு அழித்தனர்.
திருநெல்வேலிசரக காவல்துறை தென்மண்டலத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தொடர்பான வழக்குகளில் கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வைத்து தீயிட்டு அழிக்கப்பட்டன.
காவல்துறை தென்மண்டலத்தில் உள்ள திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களிலும், திருநெல்வேலி, மதுரை ஆகிய மாநகரங்களிலும் போதைப் பொருட்கள் வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 5191 கிலோ 413 கிராம் போதைப் பொருட்கள் காவல்துறை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை அழிக்க நீதிமன்றங்கள் ஆணைகளைப் பிறப்பித்திருந்தன.
போதைப் பொருள் ஒழிப்பு தினமான (12.08.2024) மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி பல்வேறு கல்லூரிகள், பள்ளிகளில் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி மாணவ, மாணவிகளால் ஏற்கப்பட்டது. இத்தினத்தை முன்னிட்டு காவல்துறையால் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் தென் மண்டல காவல்துறை தலைவர் IG. திரு. பிரேம் ஆனந்த் சின்கா., IPS., அவர்களின் ஆணைப்படி திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் DIG. P. மூர்த்தி., IPS., அவர்கள் தலைமையில் காவல்துறை தென் மண்டல போதைப் பொருள் அழிப்பு குழு உறுப்பினர்கள் திருநெல்வேலி மாநகர (கிழக்கு) காவல் துணை ஆணையர் திரு. ஆதர்ஷ் பச்சேரா., IPS, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. டாங்கரே பிரவின் உமேஷ்., IPS., மதுரை தடயவியல் நிபுணர் திருமதி. விஜயதரணி ஆகியோர் முன்னிலையில் திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் காவல் நிலையச் சரகத்திற்குட்பட்ட பாப்பாங்குளம் கிராமம் பொத்தையடியில் உள்ள ASEPTIC SYSTEMS BIO MEDICAL WASTE MANAGEMENT COMPANY என்ற தனியார் நிறுவனத்தில் வைத்து எரியூட்டி அழிக்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு. N. சிலம்பரசன் மற்றும் நாங்குநேரி உதவி காவல் கண்காளிப்பாளர் திரு. பிரசன்ன குமார், IPS ஆகியோர் செய்திருந்தனர்.
நிருபர் ஆறுமுகச்சாமி.