பன்ருட்டி ஹோட்டல் முன்னால் வைத்திருந்த இருசக்கர வாகனத்தில் இருந்து நகை பணத்தை திருடிய திருடன் கைது காவல்குழுவினர் அதிரடி DSP. ராஜா பாராட்டு.
பன்ருட்டி ஹோட்டல் முன்னால் வைத்திருந்த இருசக்கர வாகனத்தில் இருந்து நகை பணத்தை திருடிய திருடன் கைது காவல்குழுவினர் அதிரடி DSP. ராஜா பாராட்டு.
கடலூர் மாவட்டம் பன்ருட்டி உட்கோட்டம் திரு .செந்தில் அவர்கள் 17- 08 -2024ஆம் தேதி பன்ருட்டி இந்தியன் வங்கியில் அடகு வைத்த 5,பவுன் நகையை மாலை 4, மணிக்கு மீட்டுக் கொண்டு அதை தனது இருசக்கர வாகனத்தில் டிக்கியில் வைத்துக்கொண்டு சேலம் மெயின் ரோட்டில் உள்ள திருச்சி கபே ஹோட்டல் எதிரே நிறுத்திவிட்டு உள்ளே சென்று சாப்பிட்டுவிட்டு திரும்ப வெளியில் வந்து பார்த்த பொழுது இருசக்கர வாகனத்தில் இருந்த நகையும் பணமும் காணவில்லை.
டிக்கியில் வைத்திருந்த 5, பவுன் நகை 28,000 ரூபாய் பணத்தை திருடியது தெரிய வந்தது இதன் பெயரில் பன்ருட்டி காவல் நிலையத்தில் செந்தில் அவர்கள் புகார் அளித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்து நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வங்கிகளில் பணம் எடுத்துச் செல்லும் நபரை தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் டிக்கியில் இருந்து பணத்தை திருடிய சம்பந்தமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
அது சம்பந்தமாக திருடிய மர்ம நபரை கண்டுபிடிக்க புகாரின் பேரில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.SP. திரு. ராஜாராம் அவர்களின் உத்தரவின் பெயரில்பன்ருட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் DSP திரு. ராஜா அவர்கள் மேற்பார்வையில் தனி படை அமைக்கப்பட்டது .
பன்ருட்டி காவல் ஆய்வாளர் திரு. கண்ணன் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உதவி ஆய்வாளர் திரு. தங்கவேல் பன்ருட்டி [உட்கோட்டகுற்ற பிரிவு], மற்றும் காவல் குழுவினர் முதல் நிலை காவலர்கள் திரு. ஆனந்த், திரு. ராஜு, திரு. செல்வகுமார் திரு. ஹரிஹரன் திரு. அன்பரசன், தலைமை காவலர் திருமதி. லலிதா ஆகிய தனிப்படை காவல் குழுவினர் புகாரின் பெயரில் நகை திருடிய நபரை கண்டுபிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டதில் சிசிடிவி கேமரா போட்டோஸ் மற்றும் சைபர் கிரைம் தலைமை காவலர் திரு. பாலமுருகன் திரு. பத்மநாதன் ஆகியோர்களின் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டதில்.
சிசிடிவி ஃபுட்டேஜ் விசாரணை அடிப்படையில் வெங்கடேசன் என்பவர் சித்தூர் மாவட்டம் ஆந்திர பிரதேசம் ஆனால் அவன் தற்பொழுது குடியிருப்பது திருவள்ளூர் மாவட்டம் சென்னை அருகில் என்பது இந்த திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது தீவிர விசாரணை மேற்கொண்டதில்
,03-09- 2024 தேதி அன்று குற்றவாளியை கைது செய்துதீவிர விசாரணை செய்ததில்.பன்ருட்டி பகுதிகளில் திருடியதை அவன் ஒப்புக்கொண்டான் குற்றவாளியிடம் வழக்கு சம்பந்தப்பட்ட சொத்தை 32 ,கிராம் தங்க நகைகள் பணமும் கைப்பற்றி மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டதில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் வங்கிகளில் திருடு போன வழக்கு சம்பந்தமாக குற்றவாளி வெங்கடேசன் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரியவந்ததின் பெயரில் குற்றவாளியிடம் அந்த வழக்கு சம்பந்தப்பட்ட சொத்துக்கள் மீட்கப்பட்டு திண்டிவனம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு குற்றவாளி வெங்கடேசன் என்பவனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டான்.
புகாரின் பேரில் கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர்SP. திரு. ராஜா ராம் அவர்களின் உத்தரவின் பேரில் பன்ருட்டி காவல் துணை கண்காணிப்பாளர் DSP. திரு. ராஜா அவர்களின் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் திரு.கண்ணன் தலைமையிலான காவல் குழுவினர் இந்த வழக்கு சம்பந்தமாக தீவிர விசாரணை மேற்கொண்டு புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த நகைகளையும் கைப்பற்றி அந்தவழக்குசம்மந்தபட்ட குற்றவாளி வெங்கடேசனை விரைந்து தீவிர விசாரணை செய்து கைது செய்ததால் தனிப்படை காவல் குழுவினரைபன்ருட்டி காவல் துணை கண்காணிப்பாளர் DSP. திரு. ராஜா அவர்கள் பாராட்டியதுடன்
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜாராம் அவர்களும் பாராட்டினார் இந்த வழக்கில் புகார் செய்தசெந்தில் காவல்துறை னரின்தீவிர நடவடிக்கையை பாராட்டி நன்றி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்புநிருபர்.p.முத்துகுமரன்.