புளியங்குடி காவல் நிலையத்திற்கு செல்போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது காவல்துறையினர் அதிரடி
தென்காசிமாவட்டம் புளியங்குடி காவல் நிலையத்திற்கு செல்போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது தனிப்படை காவல்துறையினர் அதிரடி.
தென்காசிமாவட்டம் புளியங்குடி காவல் நிலைய தொலைபேசி எண் மற்றும் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையின் அவசர உதவி எண்ணிற்கும் போன் செய்து புளியங்குடி காவல் நிலையத்திற்கு வெடி குண்டு வைக்கப் போவதாக மிரட்டல் விடுத்து பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்ட நபரை உடனடியாக கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஶ்ரீனிவாசன் அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தீவிரமாக தேடி வந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் இருந்து செல்போன் மூலமாக மிரட்டல் விடுத்த தலைவன் கோட்டை மெயின் ரோடு பூசை பாண்டி என்பவரின் மகன் வெள்ளத்துரை (32) என்பவரை புளியங்குடி காவல் துறையினர் உடனடியாக கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் இது போன்று பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாக செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்V.R.ஶ்ரீனிவாசன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்..
நிருபர்.P.அண்ணாமலை.