கொடைக்கானலில் போதை காளான் கஞ்சா விற்ற கேரள வாலிபர்கள் உட்பட ஏழு பேர் கைது காவல்துறையினர் அதிடி

 

கொடைக்கானலில் போதை காளான் கஞ்சா விற்ற கேரள வாலிபர்கள் உட்பட ஏழு பேர் கைது காவல்துறையினர் அதிடி.

                                                                                  DSP. மதுமதி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல் மலைப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து சில சமூக விரோத கும்பல்கள் போதை காளான் கஞ்சா விற்பதாக கொடைக்கானல் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து கொடைக்கானல் DSP.மதுமதி அவர்கள் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்டின்தினகரன் தலைமையில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியிலும் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டிருந்தனர்.

- Advertisement -

                                                                       INS.  பாஸ்டடின்தினகரன்

அப்போது கொடைக்கானல் மேல்மலை மன்னவனூர் கைகாட்டி பகுதியில் சிறிய காட்டேஜ் ஒன்றில் போதை காளான் மற்றும் கஞ்சா, போதை மருந்து ஆகியவற்றை சுற்றுலா பயணிகளுக்கு விற்கப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து அந்த காட்டேஜ்வளாகத்தைகாவல்துறையினர் சுற்றி வளைத்தனர். உள்ளே சோதனையிட்டதில் அங்கு சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து இந்த காட்டேஜை நடத்தும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அனீஸ் கான் 34, என்பவரும் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஆன்ஸ் ஜோஸ் 30, ஜெய்சன் 29, டோமினிக் பீட்டர் 28, அகில் பெர்னாண்டஸ் 27, ஜான் 25, மற்றும் சிறுவன் உட்பட ஏழு பேர் கஞ்சா மற்றும் காளான் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த காட்டேஜ் மற்றும் இவர்களை போலீசார் சோதனை இட்டதில் 800, கிராம் கஞ்சா ,இரண்டு கஞ்சா செடிகள் ,50, கிராம் போதை காளான் மற்றும் சிறிய அளவிலான மெத்த பெட்டமைன் என்ற போதை மருந்து ஆகியவற்றை கொடைக்கானல் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இது பற்றி கொடைக்கானல் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து போதை காளான், கஞ்சா மற்றும் போதை மருந்து விற்று வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன் உட்பட ஏழு பேரை கைது செய்துமேல்நடவடிக்கை மேற்க்கொணடன்.

நிருபர்.R.குப்புசாமி.

Leave A Reply

Your email address will not be published.