கொட்டும் மழையிலும் குடை பிடித்துகொண்டு போக்குவரத்தை சீர்செய்த கொடைக்கானல் காவல் துறையினர்.

கொட்டும்மழையிலும் குடைபிடித்துகொண்டு போக்குவரத்தைசீர்செய்த கொடைக்கானல் காவல்துறையினர்.

தொடர் விடுமுறையால் கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகளால் கனமழையால் கடும் போக்குவரத்து நெரிசல்..கொட்டும் மழையில் குடைகளை பிடித்தவாறு போக்குவரத்தை சீர் செய்த காவலர்கள்..

- Advertisement -

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலா தளமாகும். கொடைக்கானலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தற்போது ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை உள்ளிட்ட தொடர் விடுமுறைகள் காரணமாக தமிழக மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் அதிக அளவில் குவிந்து வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கொடைக்கானலில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் காலையிலிருந்து தொடர் மழை மற்றும் மாலை நேரங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. சாலைகள் முழுக்க தண்ணீர் பெருக்கெடுத்து நிலையில் கொடைக்கானல் நகர் பகுதிகளில் பரபரப்பாக இருக்கக்கூடிய ஏரி சாலை, அண்ணா சாலை, மூஞ்சிக்கல் , நாயுடுபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் காவல் துறையினர் தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை சீர் செய்து வந்தனர்.

கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளர் DSP. மதுமதி அவர்கள் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் ஒவ்வொரு சந்திப்பிலும் நிறுத்தப்பட்டு கொட்டும் மழையில் குடைகளை பிடித்தவாறு வாகனங்களை சீர் செய்ததால் போக்குவரத்து நெரிசல் குறைந்ததுபோக்குவரத்து சீர்படுத்தப்பட்டது என்பதுகுறிப்பிடதக்கது.

நிருபர்.R.குப்புசாமி.

Leave A Reply

Your email address will not be published.