கொடைக்கானல் விடுதிஉரிமையாளரை எரித்துகொலைசெய்த கொலையாளிகள்கைது. காவல்துறையினர் அதிரடி.

கொடைக்கானல் விடுதிஉரிமையாளரை எரித்துகொலைசெய்த கொலையாளிகள்கைது. காவல்துறையினர் அதிரடி.

கொடைக்கானல் பெரும்பள்ளம், குருசடி மெத்து அருகே உள்ள தனியார் விடுதியில்,மாத சம்பளம் குறைவாக கொடுக்கப்பட்டதாக ஏற்பட்ட தகராறில் விடுதியின் உரிமையாளரை அடித்து கொன்று,உடலின் பாகங்களை வெட்டி கேம்ப்பயரில் விறகுடன் வைத்து எரித்தும்,தலை மற்றும் மார்பு பகுதியை தூக்கி வீசி சென்ற, வழக்கில் நான்கு இளைஞர்கள் கைது.

 

விடுதிஉரிமையாளர் சிவராஜ்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெரும்பள்ளம் குருசடி மெத்து அருகே விடுதியின் உரிமையாளர் கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும், உடலில் உள்ள சில பாகங்களை எரித்தும்,மீதமுள்ள பாகங்களை தூக்கி வீசியதாக மதுரை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது, மேலும் இது சம்பந்தமாக மதுரை தத்னேரி பகுதியை சேர்ந்த மணிகண்டன்(29) என்ற இளைஞரை கைது செய்து இருந்தனர்,

மதுரை காவல் துறையினர் கொடுத்த தகவல் அடிப்படையில் கொடைக்கானல் காவல் துறையினர் பெரும்பள்ளம்,குருசடி மெத்து அருகே உள்ள தனியார் விடுதியில் கடந்த செவ்வாய்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனர், இதில் விடுதியின் ஒரு அறையில் இரத்த கறைகள் இருந்தது தெரியவந்தது, மேலும் இந்த விடுதியில் குளிர் காய்வதற்காக கேம்ப் பயர் அமைக்கப்பட்டிருந்த பகுதியில் 5 லிட்டர் வாட்டர் பாட்டிலில் பாமாயில் எண்ணெய், மற்றும் கேம்ப் பயர் அமைக்கும் இடத்தில் துணி,மற்றும் எலும்பு துண்டுகள் இருந்தது சோதனையில் கண்டறியப்பட்டது.

மேலும் உடல் பாகங்களை காவல் துறையினர் சுமார் 3 மணி நேரமாக போராடி தேடினர்,இருப்பினும் உடல் பகுதி கிடைக்காத சூழ்நிலையில் மதுரையில் கைது செய்து இருந்த மணிகண்டனை வாட்ஸ் அப் கால் மூலம் தொடர்பு கொண்டு உடல் பகுதி எங்கு வீசப்பட்டு உள்ளது என தகவல் கிடைக்கப்பெற்ற பிறகு தனியார் விடுதி வளாகம் அருகே உள்ள கட்டிடம் பகுதியில் எரிந்த நிலையில் தலை மற்றும் மார்பு பகுதி இருந்தது தெரியவந்தது, இதனையடுத்து தடய அறிவியல் ஆய்வக நிபுணர் மற்றும் தடய அறிவியல் ஆய்வக ஆய்வாளர் உள்ளிட்டோர் சோதனை கொண்டு தடையங்களையும் சேகரித்தனர்,

இதனை தொடர்ந்து மீட்கப்பட்ட உடல் பாகங்களான கை,கால்,முதுகு உள்ளிட்ட எலும்பு துண்டுகள் மற்றும் எரிந்த நிலையில் இருந்த தலை மற்றும் மார்பு பகுதியை உடற் கூறு ஆய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றனர், மேலும் இந்த விசாரணையை காவல் துறையினர் தீவிரப்படுத்தினர், இதில் கொடைக்கானல் காவல் துறையினர் மதுரை காவல் துறையினரால் கைது செய்து இருந்த மணிகண்டனை அழைத்து வந்து விசாரணை செய்யும் போது, மதுரை அருகே உள்ள மறு வாழ்வு மையத்தில் தான் சிகிச்சையில் இருந்ததாகவும்,மேலும் தங்கும் விடுதியின் உரிமையாளரான, கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியை சேர்ந்த சிவராஜ் (61) என்பவரும் சிகிச்சையில் இருந்ததாகவும் தெரிவித்தார், மேலும் சிவராஜை கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு அவரது தாயார் மற்றும் சகோதரி மறு வாழ்வு மையத்தில் இருந்து கொடைக்கானலுக்கு அழைத்து வந்துள்ளனர், அப்போது பெரும்பள்ளம், குருசடி மெத்து அருகே உள்ள அவருக்கு சொந்தமான தங்கும் விடுதியில் தங்கியுள்ளார்,அங்கு சில நாட்களாக விடுதி செயல்படாமல் இருந்த
துள்ளது,

- Advertisement -

இதனை நடத்துவதற்கு பணியாட்கள் தேவைப்பட்டதால் மறு வாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்த நண்பர்களை அவ்வப்போது விடுதிக்கு சிவராஜ் அழைத்தும் வந்துள்ளார், இந்த நிலையில் கடந்த 20,ஆம் தேதி சிவராஜ் மற்றும் இவரது மறு வாழ்வு மைய நண்பர்களான மதுரையை சேர்ந்த மணிகண்டன் (29) சிவகங்கையை சேர்ந்த சந்தோஸ்(20),அருண்,ஜோசப் உள்ளிட்ட ஐந்து நபர்களும் ஒன்றாக இணைந்து 25 குவாட்டர் பாட்டில்கள் வாங்கி கொண்டு அறையில் வைத்து மது அருந்தியுள்ளனர்,அப்போது விடுதிக்கு வந்திருந்த மணிகண்டன் 3 நாட்களாக சமைத்தும் உள்ளான்.

இந்நிலையில் தினந்தோறும் சம்பளம் எவ்வளவு ரூபாய் தர முடியும்,என மறு வாழ்வு மைய இளைஞர்கள் சிவராஜிடம் கேட்டுள்ளனர், அப்போது 1000 ரூபாய் தர முடியும் என விடுதி உரிமையாளர் தெரிவித்ததற்கு,8 மணி நேரம் பணி புரியும் கொத்தானரே 1000 ரூபாய் சம்பளம் வாங்குகிறார்,எங்களுக்கு 1500 ரூபாய் சம்பளம் வேண்டும் என்றும்,3 நாட்கள் சமைத்ததற்கு சம்பளம் வேண்டும் என்றும் மணிகண்டன் கேட்டுள்ளார்,இதனையடுத்து விடுதி உரிமையாளர் ஆபாச வார்த்தைகளால் பேசி இளைஞர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்,வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது,

இதில் மறு வாழ்வு மைய இளைஞர்களில் மணிகண்டன் கட்டையை வைத்து விடுதி உரிமையாளரான சிவராஜை பலமாக தாக்கியுள்ளான்,இதில் சிவராஜ் உயிருக்கு போராடிய நிலையில்,மீண்டும் உடன் இருந்த மறு வாழ்வு மைய இளைஞர்கள் அதிக போதையில் அங்கு விறகு வெட்ட வைத்திருந்த அறிவாள்களை கொண்டு கை,கால்கள்,இடுப்பு பகுதிகள் அறுக்கப்பட்டு,அறையில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டு அறையின் அருகே உள்ள கேம்ப் பயர் அமைக்கும் இடத்தில் விறகுகளை கொண்டு தீ மூட்டியதுடன் வெட்டப்பட்ட கை,கால்களையும் எரித்துள்ளனர், அதிகாலை ஆனதால் மது போதை குறைந்த பிறகு தலை மற்றும் மார்பு பகுதி பாதி எரிந்து,கருகிய நிலையில் காணப்பட்டதால் தனியார் விடுதி அருகே உள்ள கட்டிடத்தில் தூக்கி வீசியதாக காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது,

இதனையடுத்து புதன்கிழமை அன்று மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைத்தனர், மேலும் இவ்வழக்கில் தொடர்புள்ள சிவகங்கையை சேர்ந்த சந்தோஸை சிவகங்கையில் மருத்துவரிடம் சில்மிசம் செய்த வழக்கில் புதன்கிழமை கைது செய்துள்ளனர், மேலும் இவ்வழக்கில் தொடர்புள்ள இருவரை காவல் துறையினர் தேடி வந்த நிலையில் கொடைக்கானல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அருண் ஆஜாராகியுள்ளான்,மேலும் கொடைக்கானல் காவல் துறையினர் தீவிரவிசாரணைமேற்க்கொண்டு மதுரை கூடல் நகர் பகுதியில் ஜோசப்பை கைது செய்து வழக்குபதிவுசெய்துசிறையில் அடைத்துள்ளனர்.

விடுதியின் உரிமையாளர் சிவராஜை அவரது விடுதியிலேயே வைத்து கொலை செய்து எரித்த சம்பவம் கொடைக்கானல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் கைது செய்யப்பட்டுள்ள மணிகண்டன் மீது 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் விடுதியின் உரிமையாளரான சிவராஜ் காணவில்லை என அவரது தங்கை கடந்த 23ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின்பேரில் தீவிரவிசாரணை மேற்க்கொண்டுகொலையாளிகளை அநிரடியாக கைய்து செய்த கொடைக்கனல் காவல்ஆய்வாளர் திரு.பாஸ்கரன் தலைமையிலான காவல்குழுவினரை DSP.திருமதி.மதுமிதா அவர்கள்பாராட்டினார்கள்.

நிருபர்.R.குப்புசாமி.

Leave A Reply

Your email address will not be published.