காவல்துறையில் பணியில் உயிரிழப்பு மற்றும் விபத்தால்பாதிக்கபட்ட காவலர் குடும்பத்திற்கு உதவும் காக்கிஉதவும் கரங்கள்குழு.
தென்காசி தமிழ்நாடு காவல்துறையில் பணியில் உயிரிழப்புமற்றும்விபத்தால் பாதிக்கபட்ட காவலர்குடும்பத்திற்கு உதவும் காக்கிஉதவும்கரங்கள்குழு.
தமிழ்நாடு காவல்துறை 2011, பேட்ஜ் காவல்குழுவினர் நடத்தும் காக்கி உதவும் கரங்கள்குழுவின் இரண்டாவது ஒன்று கூடல் நிகழ்ச்சி தென்காசியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு அரவிந்த் அவர்கள் கலந்து கொண்டு காவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் காவலர்களுக்கு தலைக்கவசம் அணிவது பற்றியும் செல்போன் பேசிக்கொண்டு வாகனங்கள் ஓட்டக்கூடாது எனவும் அறிவுறுத்தினார்.
2011 காக்கி உதவிக்கரங்கள்குழு அவர்களின் நோக்கம் பணியில் இருக்கும் போது இறக்கும் காவலர்களுக்கு மற்றும் பணியில் இருக்கும் போது விபத்து ஏற்பட்டு மீள முடியாத பாதிப்பிற்க்குள்ளாகிய காவலர்களுக்கு உடனடியாக உதவிக் கரங்கள்குழு மூலம் அவர்கள் குடும்பத்தினருக்கு உதவித்தொகை வழங்குதல் உதவும்க் கரங்கள்குழுவின் நோக்கம் ஆகும். இதுவரை இந்த உதவும்க்கரங்கள்குழு மூலம் 47 காவல் துறையினர் குடும்பத்திற்கு 7,92,37,737 ரூபாய் வழங்கப்பட்டுள்ளதுஎன்பது குறிப்பிடதக்கது பாராட்டுக்குரியது.
இன்நிகழ்வில் ஏராளமான காவல்துறையினர்கள் கலந்து கொண்டனர்.
சட்ட ஆலோசகர்.K.அருணாச்சலம்..