கொலை கொள்ள்ளை வழிபறி குற்ற வழக்குகளில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி கைது ஒசூர் காவல் துறையினர் அதிரடி.

கொலை கொள்ள்ளை வழிபறி குற்றவழக்குகளில் தொடர்புடைய முக்கியகுற்றவாளிகைது ஒசூர் காவல்துறையினர் அதிரடி.

 

பல கொள்ளை,வழிப்பறி சம்பவங்களில் கைத்தேர்ந்தவர்களாக கருதப்படும் ஈராணி கொள்ளை கும்பலை சேர்ந்த முக்கிய குற்றவாளியை மும்பையில் தட்டி தூக்கிய ஒசூர் போலிசார்

இந்தியாவில் பல்வேறு இடங்களில் வழிப்பறி, கவனத்தை திசை திருப்பி கொள்ளையிடுவதில் ஈராணி என்னும் சமூகத்தினர் கைதேர்ந்தவர்களாகவும் நாடு முழுவதும் கைவரிசை காட்டி யாரிடமும் சிக்காமல் இருப்பது போலிசாருக்கு மிகப்பெரிய சவாலானதாக இருக்கும் நிலையில்

- Advertisement -

தமிழகத்தின் கோவை,சேலம்,தருமபுரி மாவட்டங்களிலும் மத்திய பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் ஒசூர் பகுதியில் பல்வேறு இடங்களில் வழிப்பறி நடத்திய

ஈராணி கொள்ளை கும்பலை சேர்ந்த சமீர் சபீர் ஈராணி(27) என்பவரை மும்பை ரயில் நிலையத்தில் ஓசூர் டவுன் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், SI. வினோத் உள்ளிட்ட ஒசூர் தனிப்படை போலிசார் கடும் போராட்டத்திற்கு மத்தியில் கைது செய்து 8,ம் தேதி ஒசூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி இருந்த நிலையில், கொள்ளையனை 7, நாட்கள் போலிஸ் காவலில் எடுத்த போலிசார் தீவிர விசாரணை நடத்தி நகைகளை மீட்கவும் பிற குற்றவாளிகளை பிடிக்க மும்முரம்

பல சிரமங்களுக்கு மத்தியில் கொள்ளையனை தட்டி தூக்கிய போலிசாரை ஒசூர் DSP.திரு.பாபு பிரசாத் பாராட்டினார்.

நிருபர்.முகமதுயூனுஸ்.

Leave A Reply

Your email address will not be published.