ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலையில் பெண் தவறவிட்ட ஐந்து பவுன் நகையை ஆட்டோ ஓட்டுனர் ஆறுமுகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். DSP.முருகேசன் பாராட்டு.

 

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தங்கச்சியம்மாபட்டி பகுதியைச் சேர்ந்த காளிமுத்து என்பவருடைய மனைவி பிருந்தா என்பவர் இருசக்கர வாகனத்தில் கட்டைபையில் ஐந்து பவுன் தங்க நகைகளை வைத்துக்கொண்டு ஒட்டன்சத்திரத்தில் இருந்து தங்கச்சி அம்மாபட்டி நோக்கி செல்வதற்காக தாராபுரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கையில் இருந்த பை தவறுதலாக கீழே விழுந்துள்ளது இந்த நிலையில் சிறிது தூரம் சென்று விட்டு கையில் வைத்திருந்த பையை காணாமல் அதிர்ச்சி அடைந்த பிருந்தா இதுகுறித்து உடனடியாக ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிஅளித்தார்தார்.

 

- Advertisement -

புகார் அளித்த ஒரு சில நிமிடத்திற்க்குள் ஒட்டன்சத்திரம் ஏபிபி நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் 60 வயதான முதியவர் ஆறுமுகம் என்பவர் பிருந்தா தவறவிட்ட நகையை எடுத்துக்கொண்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் இந்த நிலையில் காணாமல் போன நகை ஒரு சில நிமிடத்திற்குள் ஆட்டோ ஓட்டுநரால் திரும்ப கிடைக்கப் பெற்ற சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களை பெரும் நெகிழ்ச்சியிலும் சந்தோஷத்திலும் ஆழ்த்தியது .

மேலும் நேர்மையாக செயல்பட்ட ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஆறுமுகத்திற்க்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் DSP.திரு.முருகேசன் அவர்கள் பொன்னாடை போர்த்தி அன்பளிப்பு வழங்கி அவரை கௌரவித்தார்.

முதன்மைஆசிரியர்.S.முருகானந்தம்.

Leave A Reply

Your email address will not be published.