தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு திருச்சி மாநகரகாவல் ஆணையர் காமினி IPS ஆய்வு.

தமிழ்நாடு சீருடைபணியாளர்கள்தேர்வு திருச்சிமாநகர காவல் ஆணையர் காமினி IPS ஆய்வு.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) கடந்த 2023-ம் ஆண்டு இரண்டாம் நிலை (Grade-II) காவலர்கள், தீயணைப்புத்துறை மற்றும் சிறைத்துறை காவலர் பதவிக்கு நடைபெற்ற எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற கூடுதல் தேர்வாளர்களுக்கு திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ள உடற்தகுதி தேர்வில் கலந்து கொள்ள மொத்தம் 998 தேர்வாளர்களுக்கு அழைப்பு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வில் (20.08.24)-ந்தேதி கலந்து கொண்ட 284 கூடுதல் தேர்வாளர்களுக்கு 1.சான்றிதழ்கள் சரிபார்ப்பு (Certificate verification) 2.உயரம் மற்றும் மார்பளவு சரிபர்த்தல் (Physical measurement Test) 3.சகிப்புதன்மை சோதனை(Endurance Test) என 3 நிகழ்வுகள் நடைபெற்றது.

- Advertisement -

இந்த உடற்தகுதி தேர்வின் சிறப்பு மேற்பார்வை அதிகாரியான(Super Check Officer) திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.N.காமினி, IPS., அவர்கள் நேரில் ஆய்வு செய்தும், பணியில் இருந்த காவல் அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கினார்கள்

இதில் தகுதிபெற்ற 167 தேர்வாளர்களுக்கு (22.08.24)- தேதி நீளம் தாண்டுதல் (அ) உயரம் தாண்டுதல், 100 மீட்டர் / 400 மீட்டர் ஓட்டம், கயிறு ஏறுதல் ஆகிய நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளது. மேலும் இத்தேர்வின்போது துணை குழுதலைவர் திருச்சி மாநகர துணை ஆணையர்(வடக்கு) திரு.S.செல்வகுமார் அவர்கள் உடனிருந்தார்கள்.

மேலும் மீதமுள்ள 498 கூடுதல் தேர்வர்களுக்கு (21.08.24)-ந்தேதி 1.சான்றிதழ்கள் சரிபார்ப்பு (Certificate verification) 2.உயரம் மற்றும் மார்பளவு சரிபர்த்தல் (Physical measurement Test) 3.சகிப்புதன்மை சோதனை (Endurance Test) என 3 நிகழ்வுகள் நடைபெறும்.

சிறப்பு நிருபர்.சே.மணிகண்டன்.

Leave A Reply

Your email address will not be published.