தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகம் முதலிடம்.

தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடுஅணியினர் முதலிடம்.

தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் சாம்பியன்ஷிப் போட்டி முதல் முறையாக தமிழ்நாடு, கொங்குநாடு பொரியியல் கல்லூரியில் ஜனவரி 20, 21 (இரண்டு) நாட்கள் ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டிகள் ஏரோஸ்கேட்டோபால், ஸ்பீடு வாக், ஸ்பீடு ஒன் மினிட் ரேஸ், ஜிக் ஜாக், தடை ஓட்டம் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

- Advertisement -

போட்டியினை சிறப்பு விருந்தினர் போலீஸ் பார்வை பத்திரிக்கை ஆசிரியர் டாக்டர். N.பாலகிருஷ்ணன் குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு, மகாராஷ்ட்ரா, ராஜஸ்தான், கேரளா, பாண்டிச்சேரி, கோவா மற்றும் பல மாநிலங்களில் இருந்து சிறந்த முறையில் வீரர், வீராங்கனைகள் தங்கள் திறமை களோடு 600,க்கும் மேற்பட்ட ஸ்கேட்டிங் வீரர்கள் பங்கேற்று விளையாடினார்கள்,
ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டியானது ஆறு பிரிவுகளில் நடைபெற்றது,

இதில்
U-8 வயதினர் பிரிவில் ஆண்கள் மற்றும் பெண்கள் முதலிடமும்,
U-10 வயதினர் பிரிவில் ஆண்கள் மற்றும் பெண்கள் முதல் இடமும்,
U-12 வயதினர் பிரிவில் ஆண்கள் மற்றும் பெண்கள் முதலிடமும்,
U-14 வயதினர் பிரிவில் பெண்கள் முதலிடமும்,
U-18 வயதினர் பிரிவில் ஆண்கள் மற்றும் பெண்கள் முதலிடமும்,
A-18 வயதினர் பிரிவில் ஆண்கள் மற்றும் பெண்கள் முதலிடமும் என புள்ளிகள் அதிகம் பெற்று ஓவரால் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றனர்,
விளையாட்டுப் போட்டியில் முதல் நான்கு இடத்தை பெற்ற சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு, ஏரோஸ்கேட்டோபால் ஃப்ட்ரேஷன் ஆப் இந்தியா சேத்தன் பகவத், மார்க்
ஃப்சமி முன்னிலையில், தமிழ்நாடு தலைவர் ராகேஷ் N சுப்பிரமணியன், செயலாளர் பிரவீன் ஜான்சன், பொருளாளர் தங்க முருகன், மற்றும் பயிற்சியாளர்கள் அமல் ஜோயல், அபு தாகீர், அருள், வினோத் ஆகியோர் ஒருங்கிணைப்பில் சிறப்பு விருந்தினராக திருமதி. அஜீம் திருச்சிமாநகரகாவல் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் அவர்கள், தமிழ்நாடு காவல்துறை, டோலி பால் (உடற்பயிற்சி இயக்குனர்- ஆர்.எஸ். கே. பள்ளி) ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர் மற்றும் மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

தலைமைநிருபர்.N.ராக்கேஷ்சுப்ரமணி.

Leave A Reply

Your email address will not be published.