சர்வதேச தடகளபோட்டியில் தங்கபதக்கம் வென்ற தமிழ்நாடு காவல்துறை தலைமை காவலர் சரவணகுமார்.

சர்வதேச தடகளபோட்டியில் தங்கபதக்கம் வென்ற தமிழ்நாடு காவல்துறை தலைமைகாவலர் சரவணகுமார்.

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச ஓபன் தடகள போட்டியில், உலகம் முழுவதிலும், 30க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து, 3000 க்கும் மேற்பட்ட சர்வதேச வீரர்கள் கலந்து கொண்டனர்…

- Advertisement -

இந்த போட்டியில், இந்தியாவிலிருந்து 200,க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்ட நிலையில், இதில் தமிழகத்தின் ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இருந்து கலந்து கொண்ட, தமிழ்நாடுகாவல்துறை போக்குவரத்து தலைமை காவலர், சரவணகுமார் அவர்கள், தட்டெறிதல் போட்டியில் தங்கப்பதக்கம், குண்டெறிதல் போட்டியில், வெண்கல பதக்கமும் பெற்று, உலக சாதனையாக இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்…

 

அவருக்கு சக காவல் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள், அரசியலமைப்பினர், சமூக ஆர்வலர்கள், உறவினர்கள், நண்பர்கள், சமூக அமைப்புகள் பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

தலைமை நிருபர். கவுந்தி கண்ணன்.

Leave A Reply

Your email address will not be published.