கோவாவில் நடைபெற்ற பெண்களுக்கான கைப்பந்து விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீராங்கனைகள்
கோவாவில் நடைபெற்ற பெண்களுக்கான கைப்பந்து விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற தமிழ்நாடு காவல்துறை மற்றும் தென்னக ரயில்வே துறை வீராங்கனைகள்.
2024, பிப்ரவரி மாதம் 8, முதல் 13,ஆம் தேதி வரையில் பட்டோர்ட்டா விளையாட்டு அரங்கம் கோவாவில் நடைபெற்ற 50, வயது 40, வயது பெண்களுக்கான கைப்பந்து விளையாட்டு பிரிவில் தமிழ்நாடு காவல்துறை மற்றும் தென்னக ரயில்வே துறையில் பணியாற்றும் வீரமங்கைகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி பல பரிசுகளை பெற்று தங்கள் துறைக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
50, வயதிற்கான விளையாட்டு பிரிவில் தமிழ்நாட்டு வீராங்கனைகள் அசாம் மாநில அணியினரோடு விளையாடி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர். 40, வயதிற்கான விளையாட்டு பிரிவில் தமிழ்நாட்டு வீராங்கனைகள் டெல்லி அணியினருடன் விளையாடி வெண்கல பதக்கத்தை வென்றுள்ளனர்.
தமிழ்நாடு காவல்துறை மற்றும் தென்னக ரயில்வே துறையை சேர்ந்த வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்று தமிழ்நாடு காவல்துறைக்கும் தென்னக ரயில்வே துறைக்கும் பெருமையை சேர்த்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வீராங்கனைகள் சுகன்யா,கமலா, சாந்தி, இந்து, உஷா, கலா, மலர், அம்பிகா, சீபா, கோகிலா, நிம்மிஷா, குமாரி, நந்தினி, அருணா,அசீம், மகேஸ்வரி, எஃப் சி கோகிலா ஆகியோர் சிறப்பாக விளையாடி தமிழ்நாட்டுக்கும் தங்களது துறைக்கும் வெற்றி கோப்பைகளை கைப்பற்றி பெருமை சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமை நிருபர். நா. ராகேஷ் சுப்பிரமணியன்..