சென்னையில் மூன்றாவது பெரியரயில் நிலையம் தாம்பரம் தயார் அதிகாரிகள் அறிவிப்பு.

சென்னையில் மூன்றாவது பெரியரயில்நிலையம் தாம்பரம் தயார் அதிகாரிகள் அறிவிப்பு.முழுவீச்சில்தயாராகி விட்டது
தாம்பரம் ரயில் முனையம் திங்கள்கிழமை முதல் [19.08.24] வழக்கமான ரயில் சேவை…!!!

மேலும் அதிகமான இரயில்களை கையாளவும் தென்மாவட்டங்களுக்கு கூடுதல் இரயில்கள் இயக்கவும் புதிய நடைமேடைகள் தயார்..!!

தாம்பரம் ரயில் நிலையத்தை சா்வதேச தரத்தில் மேம்படுத்தும் பணி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இதற்காக கடந்த பல நாள்களாக பாதிக்கப்பட்ட ரயில் சேவை, திங்கள்கிழமை முதல் வழக்கமாக இயங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்…!!

ஒரு கோடிக்கும் அதிகமானோா் வசிக்கும் சென்னை மாநகரின் பிரதான ரயில் நிலையங்களாக சென்ட்ரல், எழும்பூா் உள்ளன. இந்த ரயில் நிலையங்களில் இருந்து அதிகபட்ச ரயில்களை இயக்குவதால் புதிய ரயில்களை இயக்க இடப்பற்றாக்குறை உள்ளது. இதை நிவா்த்தி செய்ய ஏதுவாக சென்னைக்கு 3-ஆவது ரயில் முனையமாக தாம்பரம் ரயில் முனையம் உருவாக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு புகா் பேருந்து முனையம் கிளாம்பாக்கத்துக்கு மாற்றப்பட்ட பிறகு தாம்பரம் சென்னையின் நுழைவு வாயில் நகரம் என்ற நிலையில் இருந்து, தற்போது பிரதான ரயில் முனையமாக மாறியுள்ளது. தாம்பரம் ரயில் நிலையம் தினமும் 1.5 லட்சம் முதல் 3 லட்சம் பயணிகளைக் கையாளுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பே இந்த ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடைகள் அமைக்கப்பட்டு, விரிவாக்கம் செய்யப்பட்டது. இங்கிருந்து நாகா்கோவில், செங்கோட்டை, புதுச்சேரி மற்றும் வெளிமாநில நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

- Advertisement -

விரிவாக்க பணிகள் தாம்பரம் ரயில் நிலையத்தில் தற்போது 8 நடைமேடைகள் உள்ளன. முதல் இரு நடைமேடைகள் தாம்பரம் சென்னை கடற்கரை மின்சார ரயில்களை இயக்கவும், 3, 4 நடைமேடைகள் செங்கல்பட்டு மாா்க்கமாகச் செல்லும் மின்சார ரயில்களை இயக்கவும் பயன்படுத்தப்படுகின்றன..!! மீதமுள்ள நடைமேடைகள் விரைவு மற்றும் சரக்கு ரயில்களை இயக்க பயன்படுத்தப்படுகின்றன.

இனிவரும் காலங்களில் தேவையைக் கருத்தில் கொண்டு, தாம்பரம் ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடை மற்றும் இணைப்பு பாதைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், தாம்பரம் பணிமனையில் ரயில்களைப் பராமரிக்கவும், ரயில்களின் சீரான இயக்கத்துக்கு வழிவகை செய்யவும் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன..!!

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது.

தாம்பரம் பணிமனை, நிலையத்தில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றனதாம்பரம் வழியாக செல்லும் விரைவு ரயில்கள் 10 முதல் 15 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 35 கி.மீ. வேகத்தில் இயக்க அனுமதிக்கப்படும். இதுதவிர கூடுதலாக ஒரு நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தாம்பரத்தில் இருந்து சிறப்பு மற்றும் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும். ரயில் நிலையத்தின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் பயணிகளுக்
கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும். இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்றனா்.

சீராகும் ரயில் சேவை..!! தாம்பரத்தில் இருந்து கடற்கரை செல்லும் மின்சார ரயில் மூலம் தினமும் ஒரு லட்சம் பயணிகள் பயனடைகின்றனா். கடந்த இரு வாரங்களாக மின்சார ரயில் சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா். ஆக.15 முதல் ஆக.18-ஆம் தேதி வரை மின்சார ரயில்கள் மட்டுமின்றி விரைவு ரயில்களும், தாம்பரத்தில் நிற்காது என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தாம்பரம் பணிமனையில் பராமரிப்புப் பணிகள் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைய உள்ளதால் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிருபர்.சுந்தரவேலு.

Leave A Reply

Your email address will not be published.